என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Inputs"

    • 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது
    • இணை இயக்குனர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக் குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கந்திலி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களில் விவசாயிகளுக்கு தேவையான தார்பா லின்கள், தெளிப்பான்கள், கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, இரும்பு சட்டியுடன் பண்ணைக்கருவிகள் தொகுப்பு, ஜிப்சம், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்க லவை, பயிர்பாதுகாப்பு மருந் துகள், தென்னைக்கு இ L வேண்டிய போராக்ஸ், தக் கைப்பூண்டு விதைகள், உளுந்து விதைகள், காராமணி விதைகள் ஆகியவை மாநில வேளாண்மை வளர்ச்சித்திட் டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றது. சம்பா பருவ நெல் அறுடைக்குப்பின் பயறு வகைப் பயிர்கள் சாகு படி செய்யும் பொருட்டு உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றது.

    தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்து மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், டி.கே.எம். 13, கோ 51 ஆகிய நெல் ரகங்களும், கேழ்வரகு விதைகளும் மானி யத்தில் வழங்கப்படுகின்றன.

    தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும், தங்கள் பகுதி உதவிவேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
    • விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம்
    • வேளாண்மை அதிகாரி தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள ரூ.2000 மானியத்தில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் இத்திட்டத்தில் உயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம்,பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் அசோபாஸ் திரவ உயிர் உரங்கள் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    இது தவிர மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திர தொகுப்பு (கடப்பாரை, மண்வெட்டி, தாலா,அரிவாள் . களைக்கொத்தி) 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஜிப்சம் மூட்டை ரூ.108 விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தில் கீழ் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் ரூ.2000 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வரை தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நஞ்சை சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    காங்கயம் : 

    காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நத்தக்காடையூர், முள்ளிப்புரம், மருதுறை, பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வரை தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் நஞ்சை சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி 120 நாள் முதல் 130 நாள் வயதுடைய மத்திய கால ரகமான ஐ.ஆர்-20 ரக நெல், 105 நாள் வயதுடைய குறுகிய கால கோ.ஆர்-51 ரக நெல், தூயமல்லி ரக நெல் ஆகிய விதை நெல்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த ரக விதை நெல்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட மானியம் வழங்கப்பட உள்ளது. இத்துடன் நெல்லுக்கு விதை நேர்த்தி செய்ய தேவையான உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்டம் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தென்னைக்கு நுண்ணூட்டம், கரும்பு நுண்ணூட்டம், பயிறு வகை நுண்ணூட்டம் மற்றும் சிறுதானிய நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகள் தற்போது தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    எனவே நத்தக்காடையூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன வேளாண் விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு ஏற்ற விதை நெல், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகளை மானிய விலையில் பெற்று பயனடைவதற்கு நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 49 மனுக்கள் பெறப்பட்டது.
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை வழங்கினர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கீழீமுருங்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு) விஜயன் தலைமை தாங்கினார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மநாபன் முன்னிலை வகித்தார். தாசில்தார் மகாலட்சுமி வரவேற்றார்.

    இந்த முகாமில் 49 மனுக்கள் பெறப்பட்டது. 31 மனுக்கள் ஏற்கப்பட்டன 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 10 மனுக்கள் பரிசீலனை உள்ளது.

    ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை வேளாண்மை இடுபொருட்கள் தோட்டக்கலையில் தண்ணீர் பாசன மற்றும் இதர உதவிகள் ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் கலந்து கொண்ட வழங்கினார்.

    மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி ஒன்றிய கவுன்சிலர்கள் மனோரஞ்சிதம் முத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் நவமணி ரகுபதி ஜெலட்சுமி குப்புசாமி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முடியில் துணை தாசில்தார் குமராவேலு நன்றி கூறினார்.

    ×