என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்டாம்பாடி கிராம விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகம்
- முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
- விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
நாமக்கல்:
நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






