search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை விலையை 30 காசுக்கு மேல் குறைத்து கேட்டால் புகார் தெரிவிக்கலாம்
    X

    முட்டை விலையை 30 காசுக்கு மேல் குறைத்து கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

    • 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை குறைந்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அதிக அளவில் மைனஸ் விலை கேட்பதால் தொழில் நடத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் மைனஸ் விலையையும் அறிவித்து வருகிறது.

    தற்போது முட்டை விலை 460 காசுகளாக உள்ளது. அதன்படி, இன்று இந்த மைனஸ் விலை 30 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×