என் மலர்
நீங்கள் தேடியது "Breaking of idols in temple"
- வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்த னூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கண சித்தர் கோவில் உள்ளது.
- அதனை அருகாமையில் உள்ள சித்தர் மலைப்பகுதியில் வீசி சென்று உள்ளனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்த னூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கண சித்தர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த போகர் சிலை, அகத்தியர் சிலை, பாம்பாட்டி சிலை களை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அதனை அருகாமையில் உள்ள சித்தர் மலைப்பகுதியில் வீசி சென்று உள்ளனர்.
கோவில் சிலைகளை சேதப்படுத்தி மலைப் பகுதியில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






