search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்து மகசூலில் அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    மகசூலை அதிகரிக்கும் வம்பன்-11 ரக விதைகள் விதைத்து உளுந்து பயிர் செழிப்புடன் வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    உளுந்து மகசூலில் அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

    • உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    பரமத்திவேலூர்:

    விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வண்ணம் எதிர்ப்பு சக்தி வம்பன்-11 ரக விதைகளுக்கு உள்ளது. மேலும் அதிக காய் பிடிக்கும் திறன் கொண்டது.

    ஒரே மாதிரியான முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தர கூடியது.

    இது வம்பன் 8 ரகத்தை விட 12 சதம் கூடுதலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை என அனைத்து மாதங்களிலும் இந்த விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்யலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×