என் மலர்
நாமக்கல்
- தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், விளை நிலங்களில் சிப்காட் வருவதை தவிர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட 5 கிராம பஞ்சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் தீர்மானம்
ஆனால், அவற்றின் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், நேற்று நடந்த கூட்டத்தில், மீண்டும் அந்தத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அங்கு இருந்த சிலர், சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால், பஞ்சாயத்து தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதாமல் காலம் தாழ்த்தினர்.
கோபம் அடைந்த பொதுமக்கள், கிராமசபைக் கூட்டம் என்பது, பொதுமக்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல்வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, பஞ்சாயத்து செயலாளர் ரவிச்சந்திரன், அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் எழுதுவோம் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிரட்டல்
அதேபோல், பொது மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுத முடியாது எனக்கூறிய அரூர் பஞ்சா யத்து செயலாளர் கருப் பண்ணன், தீர்மான நோட்டை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித்தார்.
அவற்றை படம் பிடித்தவர்களின் கேமராவை பறிக்க முயன்றதுடன், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, சிப்காட்டிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றாமல், கிராமசபைக் கூட்டம் பாதியில் முடிந்தது.
- லட்சுமணன் (வயது 54), லாரி டிரைவர். இவர் பழைய கார் வாங்குவதற்காக பேஸ்புக் மூலம் தேடுதல் நடத்தி வந்தார்.
- மர்ம நபர் ஒருவர் தன்னிடம் நல்ல கண்டிசனில் கார் உள்ளதாகவும் அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 54), லாரி டிரைவர். இவர் பழைய கார் வாங்குவதற்காக பேஸ்புக் மூலம் தேடுதல் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னிடம் நல்ல கண்டிசனில் கார் உள்ளதாகவும் அதனை குறைந்த விலையில் தருவதாகவும் கூறினார்.
மேலும் ரூ.1.5 லட்சம் கொடுத்தால் அந்த காரை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறினார். இதனை நம்பிய லட்சுமணன் அந்த நபர் கொடுத்த வங்கி கண்க்கில் போன் பே மூலம் 3 தவணையாக 1 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பினார்.
பணம் அனுப்பி 2 ஆண்டுகள் ஆகியும் அந்த நபர் காரை கொடுக்கவில்லை. மேலும் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்தது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
- இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடிசைக்கு தீ வைப்பு
இக்கொலையை சிலர் தவறாக சித்தரித்தன் விளை வாக வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தகர சீட், ஓலை வேய்ந்த குடிசைகள் மற்றும் புதுப் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகை ஆகியவை மர்ம நபர்களால் தீ வைக்கப் பட்டது. தீ வைத்தவர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம் சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 டிராக்டர்கள் மற்றும் தகர வீடு தீ வைக்கப்பட்டது. மேலும் வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து இந்த சம்பவங்களீல் தொடர்பு உடையவர்களை தேடி வருகிறார்கள்.
அடுத்தடுத்த சம்பவங்க ளால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்ய. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-
இந்த பகுதியில் அசாதா ரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதி நிலை காக்க கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத் துழைப்பு வழங்க வேண்டும்.
கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக வடகரை யாத்தூர் மற்றும் வீ.கரைப் பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இருதரப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி. கலையரசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- முட்டை விலை 460 காசுகளாக நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள்.
- முட்டை மைனஸ் விலை 35 காசுக்கு மேல் குறைக்க கூடாது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் முட்டை விலை 460 காசுகளாக நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் முட்டை மைனஸ் விலை 35 காசுக்கு மேல் குறைக்க கூடாது. அப்படி எதுவும் வியாபாரிகள் குறைத்து கேட்டால் அந்த பகுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற, தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்க ளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டு மில்லாமல் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது.
- தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் திருச்செங்கோடு மலைக்கு விரைந்து பார்த்தபோது அந்த பகுதியில் தீ பிடித்து எர்நிதது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததை அறிந்து துரிதமாக செயல்பட்ட கோவில் நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கோடைக்காலத்தில் குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை பக்தர்கள் பொதுமக்கள் மலைப்பகுதி யில் பற்ற வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட
னர்.
- சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.
இச்சிறப்பு குறைதீர் முகாமில், மாற்றுத்திற னாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்நாளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டப் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்ப டும்.
இந்த உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு போட்டோ-4, ரேசன் கார்டு நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன், மாற்றுத்தி றனாளிகள் முகாமில் கலந்துக்கொண்டு பயனடை யலாம்.
ஏற்கனவே, மாற்றுத்திற னாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்க ளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய லாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியா, தங்கவடிவேல் தலைமையில் ஆகியோர் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.
விசாரனையில் அவர் வட்டமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதேபோல், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், அ.குன்னத்தூர், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில் களில் உள்ள அம்மனுக்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல், புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்குள்ள கொட்டகைகள் மற்றும் அங்கு வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடுகளுக்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில் 10 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவர், தனக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய குடிசை வீடுகள் அமைத்திருந்தார். அதில் ஒரு கொட்டகையில் 3 டிராக்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று நள்ளிரவில் கொட்டகைக்கு பின்புறம் வந்த மர்ம நபர்கள், அதற்கு தீ வைத்தனர். இதில் குடிசைகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களும் தீப்பிடித்து எரிந்தன.

இதை பார்த்த துரைசாமி, ஓடிவந்து டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கூரையில் எரிந்து கொண்டிருந்த தீ அவர் மீது விழுந்தது.
இதையடுத்து டிராக்டரை விட்டுவிட்டு வெளியில் ஓடி வந்தார். இதில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசையில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிராக்டர்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதேபோல் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் பழனிச்சாமி (55) என்பவர் கூரையின் மீது தகரம் வேய்ந்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
இதை பார்த்து உள்ளே படுத்திருந்தவர்கள், கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவி, அதிலிருந்த 10 மூட்டை அரிசி, ரூ.30,000, பிரிட்ஜ், பீரோ, கட்டில் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடந்த சில நாட்களாக பரமத்திவேலூர் பகுதியில் தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவமும் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது.
- சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகரையாத்தூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவரது மனைவி பூங்கொடி (40). இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.
இந்நிலையில் நேற்று இரவு வைத்தியநாதன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், அவரது வீட்டிற்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் படுக்கை அறை மற்றும் சமையல் அறை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசினர்.
குண்டு வீசிய சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வெளியே ஓடி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணாடி பாட்டில்களும் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.
ஜன்னல் கதவுகள் மூடியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதுகுறித்து வைத்தியநாதன் எடப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பூசாரி நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
- கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 28 வருடங்களாக அத்தியப்பகவுண்டர் (வயது 90) என்பவர் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வந்தார். இதற்காக கோவிலின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
பூசாரி அத்தியப்பன் நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கருவறை பின்புறம் உள்ள வேப்பமரத்தில் பூசாரி தூக்கு போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தந்தனர். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூசாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் பூசாரி அத்தியப்பகவுண்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் பூசாரி அத்தியப்பனின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரம்பாலூர் அருகே உள்ள பூலாம்பாடி ஆகும். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இவர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.






