என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

    • சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு, சேந்தமங்கலம் வசந்த மஹாலில் நடைபெறுகிறது.

    இச்சிறப்பு குறைதீர் முகாமில், மாற்றுத்திற னாளிகளுக்கான ஒற்றைச்சாளர முறையி லான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்நாளில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யு.டி.ஐ.டி. பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டப் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்ப டும்.

    இந்த உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு போட்டோ-4, ரேசன் கார்டு நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன், மாற்றுத்தி றனாளிகள் முகாமில் கலந்துக்கொண்டு பயனடை யலாம்.

    ஏற்கனவே, மாற்றுத்திற னாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்க ளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய லாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×