என் மலர்
நாமக்கல்
- தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெற்றது.
இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை சூட்டி வழிபட்டனர்.முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து, வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் சிறப்பு விருந்தி னராக வேலூர் பேரூராட்சித் தலைவர் லட்சுமிமுரளி கலந்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
கனடா நாட்டின் ஆசிரி யர்கள் கூட்டமைப்பு மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து, வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தி னராக வேலூர் பேரூராட்சித் தலைவர் லட்சுமிமுரளி கலந்து கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியை குப்பாயி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காக கணினி வழங்கிய வேர்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
விழாவில் வேர்டு நிறு வன செயலர் சிவகாமவல்லி, பேராசிரியர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேர்டு நிறுவன சமூக பணியாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
- நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.
- வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல்:
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை களால், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில் பணிபுரியும், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு ஏதேனும் அச்சம் இருப்பின், பண்ணையா ளர்கள் விருப்பப்பட்டால், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் நேரடியாக பண்ணை களுக்கே வந்து வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கி உதவிகளை செய்து கொடுத்து, அவர்க ளிடம் உள்ள அச்சத்தை போக்க உள்ளனர்.
எனவே வட மாநில பணியாளர்களை, பணியமர்த்தியுள்ள பண்ணையாளர்கள், தங்கள் பணியாளர்களுக்கு, போலீஸ் துறை மூலம் அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்க விரும்பி னால், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தி கண்டன கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், சரவணன், செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
- 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான தொழில் நல்லுறவு விருது (குட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அவார்ட்) வழங்கப்பட உள்ளது.
- சிறப்பு விருதுகளை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப் புக்குழு தேர்ந்தெடுக்கும்.
நாமக்கல்:
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மூலமாக 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான தொழில் நல்லுறவு விருது (குட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் அவார்ட்) வழங்கப்பட உள்ளது.
வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப் புக்குழு தேர்ந்தெடுக்கும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த மாவட்டத்தி லுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர்(சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து படிவங்கள் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத் துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத் தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 31.03.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப் பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக, விண்ணப் பித்தவர் தொழிற்சங்க மானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம், ஆன்லைன் மூலம் செலுத்தி, அதற்கான அசல் சலானை இணைத்து அனுப்ப வேண்டும் என நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.
- பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது.
- ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது. இதனை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற மருத்துவ குழுவினர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த பண்ணையை இன்று கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு குட்டிகள் உட்பட 20 பன்றிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்துள்ளதால், அவற்றை 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அவற்றை அழைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும். எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை
மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும்.
இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நியர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.
இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
பின்னர் முட்டை விலை உயரந்து ரூ.4.60 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-480, பர்வாலா-407, பெங்களூரு-475, டெல்லி-419, ஹைதராபாத்-425, மும்பை-485, மைசூர்-480, விஜயவாடா-438, ஹொஸ்பேட்-435, கொல்கத்தா-507.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.95 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடைபெறும்
- கடந்த மாதம் வரை மாலை 3 மணிக்கு விலை நிலவரம் தெரிந்து விடும்
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தை யில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடைபெறுகிறது.நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேங்காய் பருப்பு கொண்டு வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த பருப்புக ளுக்கு ஏலத் தொகை நில வரம் குறித்து இரவு 8 மணி வரை தெரியாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தேங்காய் பருப்பு ஏலம் விலை நிலவரம் குறித்து எங்களுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்து வதில்லை. கடந்த மாதம் வரை மாலை 3 மணிக்கு விலை நிலவரம் தெரிந்து விடும். தற்போது அங்கு பணியில் இருக்கும் ஊழி யர்கள் மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றவு டன் விலை நிலவரத்தை அறிவிக்கின்றனர்.கடந்த மாதம் வரை அறிவித்தது போல் மாலை அலுவலகத்திலேயே விலை நிலவரத்தை அறிவிக்க வேண்டும். வியாபாரி களுக்கு சாதகமாக அதி காரிகள் செயல்படுகிறார்க ளோ என சந்தேகம் எழுந்துள்ளது.மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- பாதுகாப்பு பணிகள் குறித்தும் தீவைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கடந்த 15-ந் தேதி சரளைமேடு, புதுப்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை, அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மீண்டும் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகள், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதேபோல் ஜேடர்பாளையம் -நல்லூர் செல்லும் சாலையில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டிற்கும், வடகரையாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பூங்கொடி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டும் வீசப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்தும் தீவைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் அந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓராண்டு காலத்தில் 24 மடங்கு அதிகமாகும்
- 30 ஆண்டு கள் வக்கீலாக பணிபுரிந்தார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக ராமராஜ் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஓராண்டாக அரிய லூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக அவர் பணியாற்றி வந்தார். தற்போது, நாமக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூரில் கடந்த ஓராண்டு காலத்தில் 312 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த எண்ணிக்கை அரியலூரில் நுகர்வோர் கோர்ட்டு தொடங்கப்பட்டு 2017-ம் முதல் 2022 மார்ச் வரையான 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட, ஆண்டு சராசரி தீர்ப்புகளை விட கடந்த ஓராண்டு காலத்தில் 24 மடங்கு அதிகமாகும்.
தற்போது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நுகர்வோர் கோர்ட்டு நீதி பதியாக பொறுப்பேற்றுள்ள ராமராஜ், சுமார் 30 ஆண்டு கள் வக்கீலாக பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்.நீதி நிர்வாகத்தில் டாக்டர் பட்டம், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலை பட்டம் உட்பட 12 பட்டங்களை பெற்றுள்ளார். நுகர்வோர் கோர்ட்டு நீபதியாக பொறுப்பேற்ற ராமரா ஜூக்கு கோர்ட்டு பணியா ளர்கள் மற்றும் நுகர்வோர் மன்றத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு
- ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்க்க முடியாது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதற்காக சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தால், விவசாய நிலஙகள் பாதிக்கப்படுவ துடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே இப்பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கக் கூடாது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்க்க முடியாது. உள்ளூரிலேயே அனைவரும் அனாதைகள் ஆவோம் என்று கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வளையப்பட்டி வருவாய் அலுவலரிடம், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் வளையப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நவீனாவை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னமலை அருகே சிக்கிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வேலன் மகன் பொன்னுசாமி (வயது 37).
இவர் நாமக்கல் அருகே தொட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் அருகே எடக்காடு செம்பாகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் நவீனா (32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மௌனகிருத்திக் (4) என்ற மகன் உள்ளார்.
நவீனா திருமணத்தின்போது காரைக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். பிறகு பணி மாறுதல் பெற்று, திருச்செங்கோடு தாலுகா பிரிதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலையும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பொன்னுசாமி பணிக்கு சென்றுவிட்டார். நவீனா மட்டும் தனியாக வீட்டில் விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து தனது சேலையால் விட்டதில் தூக்குபோட்டு கொண்டார்.
இதை பார்த்த அவரது மாமியார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் நவீனாவை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நவீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நவீனாவின் தந்தை நடராஜன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்செந்தில்வேல் பெருமாள் வழக்குபதிவு செய்து, நவீனா தற்கொலை செய்தது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், பொன்னுசாமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது நவீனாவிற்கு தெரியவந்தது. இதனாலேயே கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தனது தந்தைக்கும் தெரியப்படுத்திய, நவீனா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளே ஆவதால், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, நேரில் சென்று இது சம்பந்தமாக கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
கணவன் கள்ளத்தொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






