என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் விழா
- பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து, வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் சிறப்பு விருந்தி னராக வேலூர் பேரூராட்சித் தலைவர் லட்சுமிமுரளி கலந்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
கனடா நாட்டின் ஆசிரி யர்கள் கூட்டமைப்பு மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வேர்டு நிறுவனமும் இணைந்து, வேலூர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தி னராக வேலூர் பேரூராட்சித் தலைவர் லட்சுமிமுரளி கலந்து கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியை குப்பாயி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காக கணினி வழங்கிய வேர்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
விழாவில் வேர்டு நிறு வன செயலர் சிவகாமவல்லி, பேராசிரியர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேர்டு நிறுவன சமூக பணியாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.
Next Story