என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓராண்டு காலத்தில் 312 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார் He has given judgment in 312 cases in one year"

    • ஓராண்டு காலத்தில் 24 மடங்கு அதிகமாகும்
    • 30 ஆண்டு கள் வக்கீலாக பணிபுரிந்தார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக ராமராஜ் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஓராண்டாக அரிய லூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக அவர் பணியாற்றி வந்தார். தற்போது, நாமக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூரில் கடந்த ஓராண்டு காலத்தில் 312 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த எண்ணிக்கை அரியலூரில் நுகர்வோர் கோர்ட்டு தொடங்கப்பட்டு 2017-ம் முதல் 2022 மார்ச் வரையான 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட, ஆண்டு சராசரி தீர்ப்புகளை விட கடந்த ஓராண்டு காலத்தில் 24 மடங்கு அதிகமாகும்.

    தற்போது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நுகர்வோர் கோர்ட்டு நீதி பதியாக பொறுப்பேற்றுள்ள ராமராஜ், சுமார் 30 ஆண்டு கள் வக்கீலாக பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்.நீதி நிர்வாகத்தில் டாக்டர் பட்டம், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலை பட்டம் உட்பட 12 பட்டங்களை பெற்றுள்ளார். நுகர்வோர் கோர்ட்டு நீபதியாக பொறுப்பேற்ற ராமரா ஜூக்கு கோர்ட்டு பணியா ளர்கள் மற்றும் நுகர்வோர் மன்றத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×