என் மலர்
நீங்கள் தேடியது "மழையால் வெப்பம் தணிந்தது"
- குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
- இந்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்த மழையால், கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு, குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் ஸ்டாண்ட் கடைகளின் வழியாக ஓடியது.






