என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The RTO received the petitions. மனுக்கள் பெற்ற ஆர்.டி.ஓ."

    • ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது. அதனையொட்டி மோடமங்கலம் ஈ.சேவை மையத்தில் தங்கள் குறைகள் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.

    இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, ஒரே பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு பட்டா, புதிய ரேசன் கார்டுகள் பெற என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான 144 மனுக்களை கொடுத்தனர். இதில் வட்டாட்சியர் சண்முக வேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த மனுக்களுக்கு 12-ந்தேதி நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்பட்டு நல உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×