என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிப்பாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
- திருச்செங்கோடு சாலையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு குடோன் உள்ளது.
- இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு குடோன் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த ராஜகணபதி என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பள்ளிப்பாளையம் சுற்று பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு பொருட்கள், தொழிற்சாலை கழிவு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதுபற்றி வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு தொடங்கிய தீயணைக்கும் பணி அதிகாலை 3 மணிவரை நடந்தது. இந்த விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் வரை பிளாஸ்டிக் பொருட்கள் சேதமடைந்தி ருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.