என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணி முகாம் நடந்தபோது எடுத்த படம்.
பொத்தனூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
- பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர் துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம்,வார்டு உறுப்பினர்,தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.






