என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் வட்டார விவசாயிகளுக்குமானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கல்
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கிய போது எடுத்த படம்.

    மோகனூர் வட்டார விவசாயிகளுக்குமானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கல்

    • மோகனூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலா தலைமை வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான சின்ன பெத்தாம்பட்டி ,ஒருவந்தூர், அரூர், ஆண்டாபுரம், மாடகாசம்பட்டி, நன்செய் இடையார் , காளிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் கிட்டுகளான கடப்பாரை, மண்வெட்டி-1, களைக்கொத்து-1, கதிர்அறிவாள்-1, மற்றும் காரைச்செட்டி-1 ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது .

    விழாவிற்கு மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலா தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பண்ணை கருவிகள் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் ,துணை வேளாண்மை அலுவலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்த னர்.

    Next Story
    ×