என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police feat"

    • காவல் துறையினருக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் திருச்சியில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் கோவை மேற்கு மண்டல காவல்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிகு மார், 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு காவல்துறை சார்பில், 62-வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் திருச்சியில் 3 நாட்கள் நடைபெற்றது.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீஸ் துறையில் பணி புரியும் தடகள வீரர்கள், வீராங்கனைகள் போட்டி யில் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் கோவை மேற்கு மண்டல காவல்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிகு மார், 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஏட்டு அமுதா, குண்டு எறி தல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    எருமப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு ரமேஷ், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்ப தக்கம் வென்றார். ராசிபுரம் போக்குவரத்து போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஏட்டு அருள்மொழி நீளம் தாண்டுதலில் தங்கப்ப தக்கமும், 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

    திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய ஏட்டு ராதாகிருஷ்ணன் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மாநில தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட போலீசாரை, எஸ்.பி., கலைச்செல்வன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    ×