என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • 200-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் 2 கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார்.

    கூட்டத்தில் பள்ளியில் ஆண்டு விழா நடத்துவது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்வது, விளையாட்டு மன்றம் இலக்கிய மன்ற போட்டிகள் நடத்துவது, 200 -க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    எனவே பள்ளி குழந்தைகளின் தேவையை கொண்டு கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜவகர் நிஷா முகமது ரபிக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் அகல்யா நன்றி கூறினார்.

    • கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுக்காகவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கேள்வி எழுப்பிய போது, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 20-ம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    இந்தக் கூட்டத் தொடரில் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு செய்ய வேண்டுமென, நேற்று சென்னையில் வருவாய்த் துறை அமைச்சரை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சரும் உறுதியளித்தார்.

    இதனால் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாகை தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • சௌசௌ காய்கறி விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்கள் ஆய்வு.
    • நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மலைப்பயிரான சௌசௌ காய்கறி விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    விவசாயிகள் டெல்டா பகுதிகளில் நெல், பயறு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதற்கு மாற்று பயிராக மலைப்பயிரான சௌசௌ, உருளை, ஆப்பிள் சாகுபடியினை சோதனை அடிப்படையில் ஒன்றியத்து க்குட்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய அறிவுறுத்தி தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர்.

    இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் கிடைப்ப தாகவும், வியாபாரிகள் வீட்டிற்க்கே வந்து காய்கறிகளா எடுத்துச் செல்வதாகவும் இதனால் செல வில்லாமல் லாபம் ஈட்டி வருவதாக தெரிவிப்ப தாகவும் இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் முன்வந்து மாற்று பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • அம்பல் ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தை திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அம்பல் ஊராட்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் மற்றும் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதி புரத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் ஆகியவற்றையும் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் ஒன்றியக் குழு தலைவர் இரா.இராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், முருகன், சீதளா பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடந்தது.

    விழாவில் மண்ணின் இசை பாடல்கள், கவிச்சரம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, மருவரசி, சிவரஞ்சனி, கவிஞர் கண்ணையன், பத்மஜா, பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேலும் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வேதாரண்யம் சங்க தலைவர் ரமேஷ் உட்பட கல்லூரி மாணவ- மாணவிகளும், பேராசிரியர்கள் பிரபாகரன், அர்ஜூனன், மாரிமுத்து, இளையராஜா, முத்துகிருஷ்ணன் உட்பட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    மேலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆவராணி ஆனந்தன் நடுவராக கொண்டு கல்லூரி மாணவிகளின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    பேராசிரியர் ராஜா வரவேற்றார்.

    எழுத்தாளர்கள் சங்க செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

    இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் மகளிர் தின விழா பள்ளிச்செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

    மாணவ, மாணவி களிடையே ஒவியம், கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், வச ந்தா,ரவீ ந்திரன் சந்திரசேகரன், சரண்யா, இலக்கி யா,வி ஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஓய்வு பெற்ற தலை மையா சிரியர் சித்தி ரவேல் உட்பட கல்விக்கு ழுவினரும் கலந்து கொண்டனர்.

    • கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நந்தி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலின் ராசி மக பிரமோற்சவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் நந்திநாதேஸ்வரர், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர் சிவாச்சாரியார்கள் பக்தி பாடல்களை பாடினர்.

    இதனையடுத்து, மஹாதீபாராதனை காட்டப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை நந்தவன காளியம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
    • பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மரக்கன்று நடுதல் மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் மகளிர் கலந்து கொண்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் தலைமை ஆசிரியை செல்லம்மாள், பள்ளியின் தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ‘கியூ’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கியூ’ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேலூர் வாலாஜாப்பேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) ஆகிய 6 பேரை பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை 'கியூ' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் 6 பேரும் நியூசிலாந்து நாட்டிற்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்றது தெரிய வந்தது. இவர்கள் நியூசிலாந்து செல்வதற்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து உதவியதும், அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து 'கியூ' பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 9 பேரிடமும் 'கியூ' பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகர், சேவாபாரதி காமராஜ் நகர், நாகூர் அமிர்தா நகர் ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டிடங்களை, கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர்கெளதமன் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்வில், நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகராட்சி ஆணையர்ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், தியாகராஜன் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
    • பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • போட்டியில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    இதில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதில் பள்ளி தாளாளர் நித்திய சகாயராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் அன்பரசு, புயல் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ விழா நடைபெற்றது.

    தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர்.

    மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    தொடர்ந்து கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை ஆரூரில் சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.

    ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ திருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு, தருமை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×