பட்டினச்சேரி, கச்சா எண்ணை குழாயில் மீண்டும் கசிவா?

5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் கச்சா எண்ணை குழாயில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.
தண்ணீர் கலந்த கச்சா எண்ணை பீய்ச்சி அடித்த காட்சி.
தண்ணீர் கலந்த கச்சா எண்ணை பீய்ச்சி அடித்த காட்சி.
Published on

நாகப்பட்டினம்:

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2-ம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது.

குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்–டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்–களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால், நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.

இதனிடையே கச்சா எண்ணை குழாய்யில் நேற்று பராமரிப்பு பணிகள் நடை பெற்றது. அப்போது குழாய்யில் பம்பிங் செய்ததால் கச்சா எண்ணையுடன் கலந்த தண்ணீர் வானுயரத்தில் பீய்ச்சி அடித்து கடலில் கலந்தது. இதைத் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீண்டும் கச்சா எண்ணை குழாய்யில் கசிவு ஏற்பட்டதா என்ற கூறி கடற்கரையில் திரண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சி.பி.சி.எல். நிர்வாகம் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து சி.பி.சி.எல். அதிகாரிகள் கூறுகையில் குழாயை சுத்தம் செய்யும் பணியின் போது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணை செலுத்த வில்லை என்றும் தெரிவித்தனர். மீண்டும் பட்டினச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com