என் மலர்
நாகப்பட்டினம்
ஓக்கூர் தனியார் மின் ஆலை முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஓக்கூர் ஊராட்சியில் தனியார் மின் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் 30 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா தொற்றால் ஆட்கள் குறைப்பு காரணமாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். இந்தநிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் தனியார் மின் ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வேலை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தனியார் மின் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் திருக்குமார் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் முருகவேல், பொருளாளர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த ஓக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ், நாகூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் வருகிற 6-ந்தேதி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் இந்த பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இ்ங்கு பசுமை மாறா காடுகள் உள்ளன. இங்கு மான், குதிரை, நரி, முயல், காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயம் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது கடுமையாக சேதம் அடைந்தது. இந்த சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதை தொடர்ந்து தற்போது மரங்கள் வளர்ந்து பச்சைப்பசேல் என காணப்படுகிறது.
இந்த வனவிலங்குகள் சரணாலயம் அருகே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்கின்றன. வனவிலங்குகள் சரணாலயத்தை பார்ப்பதற்காக நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை திறந்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயம் நேற்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.
நாகை மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டு வனவிலங்கு சரணாலயத்தை திறந்து வைத்தார். இதில் வனத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் சுற்றுலா பயணிகள் சரணாலயத்தை சுற்றிப்பார்க்க வசதியாக 10 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
குத்தாலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், சாமி சிலை-நகையை கொள்ளையடித்ததுடன், உண்டியலில் இருந்த பணத்தையும் அள்ளிச்சென்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மஞ்சள் ஆற்றின் கரைப்பகுதியில் பழமை வாய்ந்த வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக வீரமணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் பூஜையை முடித்துவிட்டு கோவில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவில் இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 1 அடி உயரமுள்ள வெண்கலத்தினால் ஆன அய்யப்பன் சிலை, பீரோவில் இருந்த சாமிக்கு அணிவிக்கப்படும் பட்டுப்புடவை மற்றும் 4 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நேற்று காலை கோவில் பூசாரி வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்து சாமி சிலை, நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்து முதற்கட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலை, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் இளையராஜா (வயது 33) இவர் ஆட்டு கறி வெட்டும் தொழில் செய்துவந்தார்.
சம்பவத்தன்று வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த இளையராஜாவை வழி மறித்து விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகன் முனியப்பன் (23) மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருள் (21) மதி மகன் சுரேஷ்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன், அருள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் காமேஸ்வரம் கடற்கரை வழியாக சென்னை செல்ல பஸ்சுக்காக சுரேஷ் காத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசை கைது செய்தனர்.
நாகையில் ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் குமார் (வயது30). இவர் நேற்று முன்தினம் இரவு புத்தூர் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருவாரூரில் இருந்து நாகையை நோக்கி வந்த சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டியூ.சி. மாவட்ட செயலாளர் ராமன், தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நெல் கொள்முதல் செய்வதற்கு சணல், சாக்கு உள்ளிட்ட தளவாட பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். கொள்முதலுக்கான முன்னேற்பாடு பணிகளை விரிவான முறையில் செய்ய வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எடை கூலி, ஏற்று கூலி உள்ளிட்டவைகள் தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும்.சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து மாதம் 5-ந் தேதிக்குள் கூலி விவரச்சிட்டு வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து கிடங்குகள் மற்றும் சேமிப்பு நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் தாலுகாவில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்டதால் 10 முதல் 15 மூட்டைகள் வரை தான் கிடைக்கிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கி விட்டன. மீதி இருக்கும் நெற்கதிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.
ஆட்களை வைத்து கூடுதல் கூலி கொடுத்து 2 அடி ஆழ தண்ணிரில் நின்று அறுவடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு, தென்னடார், கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதியில் எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறுவடை எந்திரங்கள் ஒருமணி நேரத்திற்கு ரூ.2,100 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு போதுமான அளவில் அறுவடை எந்திரங்கள் கிடைக்காததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,250 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் நெல் விளைச்சல் பாதிப்பு, எந்திர வாடகை உயர்வு, ஆட்கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் கூடுதல் செலவு ஆகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 மூட்டைகளை மட்டுமே கிடக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 சதவீத காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கி விட்டன. மீதி இருக்கும் நெற்கதிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.
ஆட்களை வைத்து கூடுதல் கூலி கொடுத்து 2 அடி ஆழ தண்ணிரில் நின்று அறுவடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு, தென்னடார், கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதியில் எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறுவடை எந்திரங்கள் ஒருமணி நேரத்திற்கு ரூ.2,100 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு போதுமான அளவில் அறுவடை எந்திரங்கள் கிடைக்காததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,250 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் நெல் விளைச்சல் பாதிப்பு, எந்திர வாடகை உயர்வு, ஆட்கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் கூடுதல் செலவு ஆகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 மூட்டைகளை மட்டுமே கிடக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 சதவீத காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வேளாங்கண்ணி அருகே வாலிபர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் இளையராஜா (வயது33). இவர் ஆட்டு கறி வெட்டும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளையராஜாவை 3 பேர் வழிமறித்து தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உறவினரான சுப்பிரமணியன் மகன் முனியப்பன்(23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளையராஜாவை முனியப்பன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அருள்(21), மதி மகன் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்ெகாண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இளையராஜாவின் அண்ணன் வீரசேகரனுக்கு முனியப்பனின் தங்கை முத்துலட்சுமியை கடந்த ஒரு ஆண்டு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் வீரசேகரனுக்கும், முத்துலட்சுமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வந்துள்ளார்.
இளையராஜா தனது அண்ணன் வீரசேகரனுக்கு முத்துலட்சுமியை பெண் பார்த்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். தனது தங்கை வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் இளையராஜா மீது ஆத்திரத்தில் இருந்து வந்த முனியப்பன் தனது நண்பர்களான அருள், சுரேசுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இ்வ்வாறு போலீசார் கூறினர்.
இதை தொடர்ந்து முனியப்பன், அருள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேசை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி வரை கடல் சீற்றம், படகுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை, டால்பின்கள் என கடற்கரையில் இறந்து கரை ஒதுங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் கடல்வாழ் விஷப் பாம்புகள் கூட இறந்து கரை ஒதுங்குவது உண்டு.
இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியது. இந்த மீன் ஆபத்து காலத்தில் பந்து போல் மாறும்(முள்ளம்பன்றி போல்) உருமாறும் தன்னை கொண்டது. இதன் உடலில் முட்கள் போன்று இருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து பேத்தை மீனை பார்த்து சென்றனர்.
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கூத்தூர் சுடுகாடு அருகில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், கீழ்வேளூர் அருகே சொட்டா£ல் வன்னம் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜ்குமார் (வயது37) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஓர்குடி சுடுகாடு அருகே சாராயம் விற்ற கடமங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் நாவலன் (22), ராதாமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மனைவி சாராதாம்பாள் (66) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வேளாங்கண்ணி அருகே வாலிபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் இளையராஜா(வயது 33). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஆட்டுக்கறி வெட்டும் தொழில் செய்து வந்தார்.
திருப்பூண்டியில் ஓட்டல் தொடங்க போவதாக கூறி தனது தந்தை சுப்பிரமணியனிடம் இளையராஜா பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம், பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகையை கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா நேற்று முன்தினம் வெளியில் செல்வதாக வீட்டில் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். விழுந்தமாவடி கன்னிதோப்பு அய்யனார் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள், இளையராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
தனது மோட்டார் சைக்கிளை சிலர் வழிமறித்தவுடன் செய்வதறியாது திகைத்த இளையராஜா சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள பாலசாஸ்தா, மகா மாரியம்மன் கோவில்களின் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து தமிழக முதல்-அமைச்சருடன் பேசுவேன். தொகுதி பங்கீடு குறித்து பேச இன்னும் காலம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் பிரசாரத்தை முடித்த பின்னர் விரைவில் அவரை சந்தி்த்து பேசுவேன்.
நான் எந்த சமுதாயத்தை பற்றியும், மதத்தை பற்றியும், தனிநபர் குறித்தும் அவதூறாக பேசியது கிடையாது. நான்(கருணாஸ்) யார் மீதும் தனிப்பட்ட முறையில் தவறான கருத்துக்களை கூறி இருந்தால் சட்டப்படி என் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு அவர்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.
பொதுவாக முகநூல், வாட்ஸ்-அப்பில் வரக்கூடிய தகவல்களை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீசார், நான் யாரைப் பற்றியாவது தவறாக பேசி இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மண்டல செயலாளர் வீரா, மாவட்ட செயலாளர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.






