என் மலர்
செய்திகள்

பாலசாஸ்தா கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் கருணாஸ் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்த காட்சி.
சட்டசபை தேர்தல் தொடா்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன்: கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
சட்டசபை தேர்தல் தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள பாலசாஸ்தா, மகா மாரியம்மன் கோவில்களின் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து தமிழக முதல்-அமைச்சருடன் பேசுவேன். தொகுதி பங்கீடு குறித்து பேச இன்னும் காலம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் பிரசாரத்தை முடித்த பின்னர் விரைவில் அவரை சந்தி்த்து பேசுவேன்.
நான் எந்த சமுதாயத்தை பற்றியும், மதத்தை பற்றியும், தனிநபர் குறித்தும் அவதூறாக பேசியது கிடையாது. நான்(கருணாஸ்) யார் மீதும் தனிப்பட்ட முறையில் தவறான கருத்துக்களை கூறி இருந்தால் சட்டப்படி என் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு அவர்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.
பொதுவாக முகநூல், வாட்ஸ்-அப்பில் வரக்கூடிய தகவல்களை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீசார், நான் யாரைப் பற்றியாவது தவறாக பேசி இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மண்டல செயலாளர் வீரா, மாவட்ட செயலாளர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story