search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் எந்திரம் மூலம் நடைபெற்ற அறுவடை பணி
    X
    வேதாரண்யம் பகுதியில் எந்திரம் மூலம் நடைபெற்ற அறுவடை பணி

    வேதாரண்யம் தாலுகாவில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது

    வேதாரண்யம் தாலுகாவில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்டதால் 10 முதல் 15 மூட்டைகள் வரை தான் கிடைக்கிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கி விட்டன. மீதி இருக்கும் நெற்கதிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.

    ஆட்களை வைத்து கூடுதல் கூலி கொடுத்து 2 அடி ஆழ தண்ணிரில் நின்று அறுவடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு, தென்னடார், கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதியில் எந்திரம் மூலம் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அறுவடை எந்திரங்கள் ஒருமணி நேரத்திற்கு ரூ.2,100 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டனர்.

    இந்த ஆண்டு போதுமான அளவில் அறுவடை எந்திரங்கள் கிடைக்காததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,250 வாடகை கொடுத்து அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் நெல் விளைச்சல் பாதிப்பு, எந்திர வாடகை உயர்வு, ஆட்கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் கூடுதல் செலவு ஆகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தொடர் மழையால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டதால் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 மூட்டைகளை மட்டுமே கிடக்கிறது.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 சதவீத காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    Next Story
    ×