என் மலர்
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் பிரபாகரன்(வயது18). புதுப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சலீம் மகன் ஷாஜகான்(19). ஆந்தக்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (18). சம்பவத்தன்று பிரபாகரன், ஷாஜகான், ஆகாஷ் ஆகிய 3 பேரும் ஸ்கூட்டரில் கீழ்வேளூரில் இருந்து கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஷாஜகான் ஓட்டினார்.
பட்டமங்கலம் நெல் கொள்முதல் நிலையம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன், ஷாஜகான் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாஜகான் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஜகான் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டிவந்த புதுச்சேரியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சோமசுந்தரத்தை(42) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குற்றம்பொருத்தானிருப்பு சின்னபாலம் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சரவணன்(வயது45), ஆழியூர் பிரிவு சாலை பிள்ளையார் கோவில் அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(55) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நாகக்குடையான் கிராமம் நடுசாலையை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ ைவத்்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை
அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் புகழேந்தி, அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அரசுத்துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும். எ.,பி. பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக, 40 பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகை-நன்னிலம் சாலையில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் மரம் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அருகே மரைக்கான்சாவடியில் நாகை-நன்னிலம் சாலையில் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் உள்ளது. இந்த மரம் கஜா புயலின் போது சாலையில் சாய்ந்த நிைலயில் உள்ளது. இந்தசாலை வழியாக அப்பகுதி மக்கள் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைத்தெரு, மார்க்கெட், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் நாகை-நன்னிலம் சாலை வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் லாரிகள் இயக்கப்படுகின்றன. சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மரத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
மரம் உள்ள இடத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த மரத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது நெல் மூட்டைகள் மரத்தில் மோதி சரிந்து விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மாதம் தனியார் பஸ் இந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர் விபத்துக்களை ஏற்படுத்தும் தூங்குமூஞ்சி மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகூரில் 200 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகூர்:
நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் தயாரிக்கப்படுகிறதா? என ஆணையர் ஏகராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அரசகுமார், சுந்தர்ராஜ் உள்பட நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த 200 கிலோ தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடையை மீறி பாலிதீன் பைகளை தயாரித்த அந்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகை நகர் பகுதியில் இயங்கி வரும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. இதை மீறி பயன்படுத்தினால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 கீழ் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் அருகே நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மேட்டுப்பாளையத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை கண்டித்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், நாகூர் நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகையில், சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போக்குவரத்து ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவுரி திடலில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய இடங்களின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் போலீஸ் துறையினர், இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர்.
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா பேசும் போது கூறியதாவது:-
பொதுமக்கள் கண்டிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இதனை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை முழுவதும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கோகுலகநாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அமுதகுமார் கலந்து கொண்டு பேசினார்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயித்து கட்டாய அபராத வசூல் செய்வதை கைவிட வேண்டும். 2013-14-ம் ஆண்டுகளில் அரசின் நேரடி பயிற்சி பெற்ற 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பிரிவினருக்கு, 1 - ம் நிலை சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். வெளி ஆதார அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,715, 2-ம் நிலை சுகாதார
ஆய்வாளர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நிரந்தர மஸ்தூர் கள பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகை கலெக்டர் பிரவீன் நாயர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பயம் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில்(மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், திருவெண்காடு, நல்லூர், ஆக்கூர், திருமருகல், வடுகச்சேரி, திருப்பூண்டி, தேவூர், தலைஞாயிறு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் பிரவீன் நாயர் போட்டுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இன்று(அதாவது நேற்று) நான், கூடுதல் கலெக்டர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டோம். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 20 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளிலும், தரம் உயர்த்தப்பட்ட 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
தற்போது முன்களப்பணியாளர்களான வருவாய்த்துறை, போலீஸ்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.
முகாம்களில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் பயமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், பயிற்சி கலெக்டர்கள் தீபனா விஷ்வேஸ்வரி, நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், துணை இயக்குனர்(சுகாதாரத்துறை) சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்:
கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு வந்தனர். அங்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சேசிங், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குநர் ஷீபம் கார்க், மத்திய மீன்வள மேம்பாட்டு துறை ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கீடு செய்தனர்.
இன்று 2-வது நாளாக நாகை மாவட்டத்துக்கு வந்த ஆய்வுக்குழுவினர் கீழையூர் தாலுகா கருங்கண்ணி பகுதி வயல்களில் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.
அப்போது நெல்மணிகள் முளைத்ததால் அனைத்தும் பதராகி விட்டது. பயிர்கள் அனைத்தும் மழையால் வீணாகி விட்டது. சேதமான நெற்பயிர்கள் வைக்கோலுக்கு கூட தேறாது. எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இதேப்போல் உளுந்து, நிலக்கடலை பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினர். அதற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் உளுந்து, நிலக்கடலை பயிர்களையும் பார்வையிட்டு சேத அளவை கணக்கீடு செய்தனர். இதையடுத்து அங்கிருந்து பாலையூர் பகுதியில் ஆய்வு நடத்தினர்.
பின்னர் இன்று மதியம் கடலூருக்கு புறப்பட்டு சென்றனர்.

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சி மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ரபீக் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.