search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை-நன்னிலம் சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் தூங்குமூஞ்சி மரத்தை படத்தில் காணலாம்.
    X
    நாகை-நன்னிலம் சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் தூங்குமூஞ்சி மரத்தை படத்தில் காணலாம்.

    நாகை-நன்னிலம் சாலையில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் மரம் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

    நாகை-நன்னிலம் சாலையில் தொடர் விபத்துகளை ஏற்படுத்தும் மரம் அகற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அருகே மரைக்கான்சாவடியில் நாகை-நன்னிலம் சாலையில் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் உள்ளது. இந்த மரம் கஜா புயலின் போது சாலையில் சாய்ந்த நிைலயில் உள்ளது. இந்தசாலை வழியாக அப்பகுதி மக்கள் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைத்தெரு, மார்க்கெட், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    மேலும் நாகை-நன்னிலம் சாலை வழியாக கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் லாரிகள் இயக்கப்படுகின்றன. சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மரத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

    மரம் உள்ள இடத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த மரத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது நெல் மூட்டைகள் மரத்தில் மோதி சரிந்து விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த மாதம் தனியார் பஸ் இந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர் விபத்துக்களை ஏற்படுத்தும் தூங்குமூஞ்சி மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×