என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியை பெறக்கூடிய அற்புதநாள். அதிலும் 3 அமாவாசைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த திதி நாளாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என 3 அமாவாசையிலும் தவறாமல் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். அதன்படி இன்று தை அமாவாசை ஆகும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள், புனித தலங்களில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். கருகமணி, எலுமிச்சம் பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கடலில் விட்டு புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்கி சென்றனர்.
இதேப்போல் கோடியக் கரை அக்னிதீர்த்தம், ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல் ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.
திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடும் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் பித்ரு கடன் செலுத்துவது “காசிக்கு வீசம் கூட” என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராட பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காவிரி ஆறு செல்லும் பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி ஆற்றில் புனித நீராடி னர். படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சையில் பலர் தங்களது வீட்டின் மாடியில் முன்னோர்கள் படங்களை சுத்தம் செய்து துளசி, வில்வம் சார்த்தி வழிபாடு நடத்தி தர்ப்பணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டனர். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரையும், காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்கினர்.

நாகப்பட்டினம் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமீம்அன்சாரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். அடித்தட்டில் வாழும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 400 சதுர அடியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் விவசாய சங்க செயலாளர் தங்கையன், தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சரோஜா, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்கரப்பன் (வயது50). விவசாய தொழிலாளி. இவர் நேற்று அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் அழகு புத்திர அய்யனார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் சக்கரப்பன் தவறி விழுந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தேடினா். அப்போது சக்கரப்பன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்கரப்பனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

திருமுல்லைவாசல் பகுதியில் மீன்வரத்து குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கடற்கரை கிராமமான திருமுல்லைவாசலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், ராதாநல்லூர், வழுதலைகுடி, கீழமூவர்க்கரை, தென்னாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கிருந்து மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மீன்கள் குறைவான அளவிலேயே பிடிபடுவதாக மீனவர்கள் ஏமாற்றத்துடன் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘தற்போது கவலை மீன் மட்டுமே பிடிபடுகிறது. இந்த மீன்கள் கிலோ ரூ.69-க்கு விற்பனையாகிறது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கவலை மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கவலை மீன் மருத்துவ குணம் உடையது என்பதால் நன்கு விற்பனையாகிறது.
மேலும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. படகுக்கு பயன்படுத்தும் டீசல் மற்றும் ஆட்கள் கூலிக்கு கூட வருவாய் கிடைப்பதில்லை. இறால்களும் குறைந்த அளவே பிடிபடுகிறது. இதனை தரம் பிரிப்பது பெரிய வேலையாக உள்ளது.
இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகையில் அரசு ஊழியர்கள் 7-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 7-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராணி, வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 17 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாய்மேடு:
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி பாலகுரு, முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீரப்பன், நாகராஜ், செங்குட்டுவன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பொன்வெளி- பாப்பாக்கோவில் மெயின் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நாரணமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மகேஸ்வரன் (வயது22), ஓரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் அய்யப்பன் (20) என்பதும, அவர்கள் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
நாகையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் ஒருவரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மதி மனைவி வீரலட்சுமி (வயது50) என்பவர் தனது வீட்டின் பின்புறம் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும், அங்கிருந்து பாக்கெட் போட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயம் மற்றும் பாக்கெட் போட பயன்படுத்திய எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாகையில் அரசு ஊழியர்கள் 5-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா கலந்து கொண்டு பேசினார்.
அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜூ, சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு கரை பகுதியில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழ்வேளுர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது கோகூர் வெட்டாற்றில் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர்.
மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கோகூர் மெயின்ரோட்டை சேர்ந்த அன்பழகன் (வயது45) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கோகூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் இளையராஜா, ஆணைமங்கலம் மஞ்சவாடி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அற்புதராஜ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
திட்டச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தப்பட்ட 400 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
திட்டச்சேரி:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் போலீசார் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். இதைப்போல குத்தாலத்தில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார்சைக்கிள்கள் வந்தன. அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் 3 மூட்டைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 400 சாராயம் பாக்கெட்கள் இருந்தன. உடனே போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் வந்த கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பரவாழ்க்கை மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாபு (வயது22), அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ஹரிகரன் (21), பெருங்கடம்பனூர் புதுத்தெருவை சேர்ந்த ராஜா மகன் ஜெயபிரகாஷ்(22) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்வேளுர் பகுதிக்கு புதுச்சேரி மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம், பிப்.6-நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை:
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் 4-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஜி.பி.எப். வட்டி குறைப்பு ரத்து ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.