search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலும் ஒருவர் கைது"

    • வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    தேனி மாவட்ட விவசாயிடம் 2000 ரூபாய் நோட்டு களை தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்த ஏழு பேர் கொண்ட கார் கொள்ளையர்களில் ஏற்கனவே நான்கு பேரை கைது செய்துள்ள மொடக்கு றிச்சி போலீசார், மேலும் நாமக்கல் மாவட்டம் பரம த்தி வேலூர் அருகே பொ த்தனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி 55 என்ற நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த வர் சிவாஜி (67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50). என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகினார். சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த வரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டு க்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து உறவினர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்தி ரன் ஆகியோருடன் லக்கா புரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.

    இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் வந்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜி உறவினர் செந்தில் ஆகியோருடன் பரிசல் துறையில் இருந்து பெருந்துறைக்கு புறப்ப ட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அரசு அதி காரிகள் என கூறி ரூ.35 லட்சத்தை பறித்து கொண்டு 7 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து ஏற்கனவே கரூர் மாவட்டம் நாகம்பள்ளியைச் சேர்ந்த ராஜேந்திரன், சக்தி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன், சின்னதுரை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூ ரை சேர்ந்த மாதேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி (55) என்பவரை நேற்று மொடக்குறிச்சி அருகே உள்ள ஆரியன் காடு பாலம் நுழைவு அருகே வாகன சோதனையின் போது மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு காரை போலீசார் பறி முதல் செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் ரோந்து பணியில் வந்த போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள நடுமாலப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29). பெயிண்டர். இவர் கடந்த ஜூலை 23ந் தேதி அவரது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் சர மாரியாக வெட்டி முனீஸ்வ ரனை கொலை செய்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் தலைமையிலான போலீசார் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே நல்லேந்திரபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாசாணத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலி மதுபான ஆலை இயங்கிய விவகாரத்தில் மயிலாடுதுறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதி குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த மாதம் 9-ந் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர்.

    போலி மதுபானம் தயாரித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்த குளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் சீர்காழி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மதுவிலக்கு போலீசார் சீர்காழி பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டில் போலி மதுபான ஆலை இயங்கிய விவகா ரத்தில் தொடர்புடைய மயிலாடு துறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதியில் இருந்த குமார் (48) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவரை ஈரோடு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 2-ந் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×