என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
    • ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு எள், பயிறு, உளுந்து சாகுபடி பயிர்களுக்கு நிவராணம் கேட்டும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நடத்த வட்டாரவிவசாய சங்க தலைவர் ராஜன், விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அதனை தொடர்ந்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கோரிக்கை மனுவினை தாசில்தார் ரவிச்சந்திரனை சந்தித்து விவசாயிகள்அளித்தனர் .

    பின்னர் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், சமூக நல தாசில்தார் ரவி, துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது இப்பிரச்சினைகுறித்து நாளை தாலுகா அலு வலகத்தில்வி வசாயிகள், வேளா ண்மைதுறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும் என தாசில்தார் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    • நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-நாகை சாலையில் முக்கிய அலுவலக ங்களான நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, வட்டாட்சியா் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்க–ல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினசரி பகல் நேரங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.

    வேதாரண்யம் –நாகை மெயின்ரோட்டிலிருந்து நீதிமன்றம் சாலை பிரியும் இடத்திற்கு இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து தந்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடன் செய்து விபத்தினை தடுக்க உரிய துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • இக்கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
    • தீமிதி திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே மகிழியில் அமைந்துள்ள 32அடி உயரவாழ் முனீஸ்வரர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரம்மாண்ட சுதையினால் செய்யப்பட்ட சிலை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆனி ஆண்டுத் திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    முக்கிய விழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பம்பை மேள வாத்தியங்களுடன் பூந்தேர் மற்றும் பூங்கரகம் புறப்பாடாகி அழைத்துச் சுற்றி வலம் வந்தது. அதைத்தொடர்ந்து வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு சிறப்பு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள மகளிர் குழு பிரதிநிதி களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வனம் தன்னா ர்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார். இதில் தொடர்ச்சியாகசெய ல்படாத மகளிர் குழுக்களை செயல்பட வைத்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஊட்ட ச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல், தனித்தொழில் செய்ய ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுவி னரை அடையாளம் காணுதல் ஆகியன பற்றி பயிற்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், பணித்தள பொறுப்பாளர் ஐயப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தது.
    • வருகிற 4-ம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாகை யில் நடைபெறும்புத்தக திருவிழாவில், பொன்னி யின் செல்வன், பாரதியார் கவிதைகள், நீதிநூல் கஞ்சியம், சிறுகதைகள் என இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட 110 பதிப்பகங்களின் புத்தகங்கள் குவிக்கப்பட்டி ருந்தது.

    கடந்த 24ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சி ஜூலை 4-ம் தேதி வரை 10, நாட்கள் நடைபெறும் புத்தகக் திருவிழாவின் நிகழ்ச்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் முதல்வர் எஸ்.நடராஜனன் உடன் உள்ளார்.

    • வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • நீண்ட நாட்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோ க்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள்வந்து செல்கின்றனர். வேளா ங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு தரமற்ற அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகி நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீர் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரி த்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வடக்குபொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
    • பொதுமக்கள் தங்களது குறைகளை இலவச எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

    பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வேளாங்கண்ணி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், காந்தி பூங்கா, கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெறுகிறது.
    • தூய்மை பணியாளர்கள் சென்று அந்த இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24 வார்டுகளிலும், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடற்கரை பூங்கா, காந்தி பூங்கா கோவில் மற்றும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூய்மை பணி நடைபெறுகிறது.

    இதன்படி நீண்ட நாட்களாக மீன் விற்பனை நிலையத்தில் புல், மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் புகழேந்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    உடன் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், துணை தலைவர் மங்களநாயகி ,வார்டு உறுப்பினர் மயில்வாகனம்மற்றும் தூய்மை பணியாளர்கள் 30 பேருடன் நகரமன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி சுமார் ஒருடன் குப்பைகள் அகற்றபட்டது.பின்பு அப்பகுதிக்கு பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    • ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார்.
    • சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட் மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வலிவலம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கீழ கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கூடும் இடங்களில் சாராயம் விற்று வருகிறார்.

    இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தாலிச் செயினை கேட்டுச் சென்ற போது தாலி செயினை கொடுக்காமல் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்தும் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கு எடுக்காத்தால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு முத்து கிருஷ்ணனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர்.அப்போது சாராய வியாபாரி தப்பித்து ஓடிய நிலையில் சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட், மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.மேலும் கூரை கொட்டகையை வெட்டி சாய்த்தனர். சாராய கடையை அந்த பகுதி மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கி சாராய மூட்டைகளை சாலையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு துணைபோகும் நபர் மீதும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சாராயம் இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.
    • வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி பேசினர்.இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்றதுணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம், நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும்.
    • மீன் பிடிக்கும்போது கடல்பரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரியபடுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அண்ணப்பேட்டை - சிந்தாமணிகாட்டில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி இந்திய கடற்படை மற்றும் மீன் வளத்துறையினரால் நடத்தபட்டது பயிற்ச்சிக்கு இந்திய கடற்படை நாகை முகாம் அதிகாரி டெப்டினன்ட் கமாண்டர் கர்வேந்தர் சிங் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் கடற்படை வீரரர்கள் நவீன், ராஜேஷ், நந்தகுமார் மீன் வளத்துறை அதிகாரிகள் அருண், மற்றும் பிரியங்கா வாய்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், கார்த்திகேயன் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனா.

    கூட்டத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்றும் நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் மேலும் மீன் பிடிக்கும்போது கடல்ப ரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரி யபடுத்த வேண்டும் கடத்தல் தொழில் செய்பவர்கள் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் தற்போது அன்னிய நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது இதனால் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் இலங்கைநாட்டவர்கள் வர வாய்ப்பு உள்ளது அவ்வாறு யாரும் வந்தால் உடன் தெரிவிக்கவேண்டும் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    ×