என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.
    • கோவிலை சுற்றி 4 வீதிகிலும் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற மே மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் ஆகியவை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக முதற்கட்டமாக சட்டைநாதர் ஆலயத்தில் நான்கு வீதிகளிலும் மெகா தூய்மை பணி முகாம் துவங்கியது.

    இதில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினர்.

    மேலும் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது நான்கு விதிகளிலும் நகராட்சி தூய்மையான குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்கவும், நான்கு வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைக்கவும், நகர் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையர் வாசுதேவன் தெரிவித்தார்.

    • சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.
    • அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பால் காவடி, பறவை காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக தேர் தெற்கு வீதி, தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதே போல் சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உப்பனாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப் போல் ஆதமங்கலம் அய்யனார் கோவில், அரூர் மாரியம்மன் கோவில், தென்பாதி மகா மாரியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவில், ஓலையாம்புத்தூர் அய்யனார் கோவில், செம்பியன் வேளங்குடி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • நேற்றிரவு சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம்.

    பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வணங்குவதாக ஐதீகம். பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

    அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செ ல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புறை யாற்றினர்.

    தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
    • ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றி ஆலோசனை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி மருத்துவம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார் அப்போது நிம்மேலி கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி (வயது 85) சசிகலா 50 ஆகியோரது வீட்டிற்கு நேரடியாக சென்று மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணி புரியும் செவிலியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் குறித்து கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குழந்தைகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 73508

    பயனாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தொற்றா நோய்கள் அம்மைகளை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், தொடர் கண்காணிப்பு செய்வதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதமாக வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகின்றது.

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கின்றனர்.

    இது தவிர, அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள்பற்றி எடுத்துரைத்து ஆலோச னைகள் வழங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணை (சுகாதாரம்) இயக்குனர் அஜித்பிரபு குமார், தாசில்தார் செந்தில்குமார்

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் டாக்டர் பத்மபிரியவர்தினி சுகாதார மேற்பார் வையாளர் ராமோகன் சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் ஊராட்சி தலைவர் வசந்தி செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    • அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.

    வட்டார தலைவர் ரஜினி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கணினி ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், அலுவலர்களுக்கு பணி அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (வயது 27). சமையல் மாஸ்டர். இவர் கடந்த 2-ந்தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து, சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில்தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கனிவண்ணன் மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஒருவரிடம் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்த தீவிர விசாரணையில் மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் (52) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, சீர்காழி தென்பாதியில் உள்ள தேவேந்திரனின் வீட்டிற்கு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்தினர். அதில் ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 காலி தோட்டாக்கள் ஆகியவை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    இவை அனைத்தும் கொலை வழக்குடன் ஒத்துப்போனதால் தேவேந்திரனிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கிடைத்த தகவலின்படி, போலீசார் அங்கிருந்து புறப்பட்டு தேவேந்திரனின் சொந்த ஊரான வைத்தீஸ்வரன் கோவில் அருகே சேத்தூர் கிராம உடையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.அங்கிருந்து, மேலும் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் காலித்தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதன் மூலம் கனிவண்ணனை, அவரது நண்பர் தேவேந்திரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். சமையல் மாஸ்டரை அவரது நண்பரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
    • உழவர் குழுவினர் உள்ளிட்ட பலர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் அருகே தில்லையாடி கிராம ஊராட்சியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடைப்பெற்றுவருகிறது.

    இந்நிலையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தாசில்தார் காந்திமதி, ஊராட்சி செயலர் செல்வராணி, மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், உழவர் குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது 30)சமையல் கலைஞர்.

    இவர் தற்சமயம் சீர்காழி நகரில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனாற்றங்கரையில் ரத்த வெள்ளத்தில் கனிவண்ணன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கனிவண்ணன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு அழுதப்படி விரைந்து வந்தனர்.

    குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜவகர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அதனை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் சீர்காழியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனிடையே இறந்த கணிவண்ணனின் தலையின் நெத்தி பொட்டில் இருபுறமும் இருக்கும் காயத்தை பார்க்கும் போது கூர்மையான உளுக்கி போன்ற ஆயுதத்தால் குத்தப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உடலை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த சீர்காழி அரசு மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணன் உடல் எடுத்து செல்ல ப்பட்டது.

    குற்றவாளிக ளை பிடிக்க ஏ .டி .எஸ். பி சுகுமாரன் தலைமையில் 5 டிஎஸ்.பி. கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    பதட்டமான சூழல் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் எந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சிங்கப்பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி தலைமை தாங்கினார். செம்பனார் கோவிலில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேலாளர் குடந்தை கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்,

    இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    • சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தக டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    இதில் கோவில் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், விருதகிரி காசாளர் கலியராஜ், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது 4 மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    • சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்.
    • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி கடலோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக நெப்பத்தூர் கிராமத்தில் லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது மேலும் ஓட்டு கட்டிடத்தில் உள்ள கோடுகள் சேதம் ஆகி உள்ளது.

    தகவல் அறிந்த சீர்காழி மற்றும் மேலையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.

    இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×