என் மலர்
மயிலாடுதுறை
- பொறையாறு அருகே 2 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது
- பொது மக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் முன்னிலை வகித்தார். பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன், வரவேறறார்.
இதில் மயிலாடுதுறை ராமலிங்கம்,எம்.பி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.
விழாவில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நள்ளிரவு தண்ணீர் வந்தடைந்தது.
- இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும்.
குத்தாலம்:
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார்.
இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நல்லிரவு தண்ணீர் வந்தடைந்தது. அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர்.
மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.
இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிட த்தக்கதாகும்.
- காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
- சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலை ப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு டாக்டர்களால் இலவசமாக வழங்கப்படும்.
இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய தகுதிவாய்ந்த பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்தன.
- மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அருகே இளைஞர்கள் பேசி கொண்டிருந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் கழுமலை அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் அருகே இருந்த தென்னை மரம் திடீரென அடியோடு விழுந்தது.
எதிர்ப்புறம் இருந்த மின்கம்பத்தில் தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடி யாக மின்சார வாரியத்தினர் வருகை புரிந்து மின் இணைப்பைத் தூண்டித்தனர்.
தொடர்ந்து தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.
தென்னை மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் அருகே இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் ஒரு கார் ஒன்றும் மரம் விழுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் தென்னை மரம் அடியோடு விழுந்தது.
முன்கூட்டியே விழுந்து இருந்ததால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி விலகாமல் கூறினர்.
- காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
- முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த (ஜூன்) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.
- சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தேர் ஓடும் வீதிகள்,கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தியாகிசாமிநாதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் நகர்புரத்தில் சுமார் 1கோடியே 54 லட்சம் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் முக்கிய சாலையான பாரத வங்கி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமல்பழைய சாலைகள் அகற்றப்படாமல், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
- நீர், நிலம், காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
- நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திரி பப்ளிக் பள்ளி சார்பில், மாணவ-மாணவிகள் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
கல்வி அறக்கட்டளை நிறுவனர் கியாந்சந்த் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார், மகேஸ்வரி, சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் நீர்,நிலம்,காற்று மாசு படுவது குறித்து பொது மக்க ளிடையே விழிப்பு ணர்வை நாடகம் மூலம் நடத்தினர்.
மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்
- வைத்தீஸ்வரன் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.
அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
- கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பக்தர்கள் பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இந்த கோயிலில் ஆனி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது.
முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கோ சாலையி லிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.
- 21 வகையான திரவிய பொருட்களால் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சண்முகார்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் தனி சன்ன தியில் செல்வமுத்துக்கு மாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் மண்டலா பிஷேக கிருத்திகையை யொட்டி செல்வமுத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பால்,தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் முதலான 21 வகையான நறுமன திரவிய பொருட்க ளால் சிறப்பி அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்து பக்த ர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
- படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் அமைக்க https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசி யமாகும்.
குறைந்தபட்சம் 2 mbps அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.
படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
- இவ்வாறு வாகனத்தை இயக்கினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநா தன் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீர் வாகன தணிக்கை செய்தார்.
அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்தார்.






