என் மலர்
மயிலாடுதுறை
- பேரணியை மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
- பேரணி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நி லைப் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் சீர்காழிடெம்பிள் டவுன் இணைந்துநாட்டு நலப்பணி திட்ட மாணவ ர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியை. மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
முகாம் அலுவலர் முரளிதரன், ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள் சுப்பு சொர்ண பால், தங்க.ரவிச்சந்திரன், மலர்கண்ணன், பாலாஜி, முரளி, மோகனசுந்தரம், முன்னாள் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, விஜயன், குமார், சந்தோஷ் மற்றும் காவல்துறை, போக்குவரத்து காவல்த் துறையினர், கலந்துக் கொண்டனர். பேரணி சீர்காழி முக்கிய வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் செய்தார். நிறைவில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகரன் நன்றிக் கூறினார்.
- அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.
- கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும்.
இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேதபாராயணம் செய்வதற்கு உரிய அந்தணர்களைக் கொண்டு வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தணர்கள் ஒன்பது பெயர் வேதங்களை பாராயணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பெங்களூர் ரவிகுமார் கலந்து கொண்டார். கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
- மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கல்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (வயது 21).
சம்பவத்தன்று இவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மின்சாரத் துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. வழங்கினார்.
அப்பொழுது செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, உதவி மின்பாதை பொறியாளர் ரங்கராஜன், சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- புதிய பஸ் நிலைய கட்டிடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பஸ் நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2027-2022-இன்கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
இந்த பணிக்கான ஒப்புதல் கோரி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடை பெற்ற அவசர நகர்மன்றக் கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார்.
அப்போது நடைப்பெற்ற விவாதங்கள் வருமாறு:
நடராஜன் (தி.மு.க.) :
மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், பேருந்து நிலையம் அமைக்க இடம் தந்த தருமபுரம் ஆதீனம், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர், அமைச்சர்களுக்கும் நன்றி.
கணேசன் (ம.தி.மு.க) :
புதிய பஸ் நிலையத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் நகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ.1 கோடி (4.97 சத வீதம்) கூடுதலாக ஒதுக்க வேண்டியதன் அவசியம் என்ன ? புதிய பஸ் நிலைய கட்டடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆனந்தி (அ.தி.மு.க) : -
புதிய பஸ் நிலையம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்:-
இடம் தேர்வு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றியது மக்களால் தேர்வு செய்யப் பட்ட தி.மு.க நகரமன்றத்தில் தான்.
அதிமுக ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அப்போது டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை.
தற்போதைய தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி அதனை அவர் ஏற்று முழுமையான மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதற்காக தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்த அமைச்சர்கள்.
எம்எல்ஏக்க ளுக்கும், ஒத்துழைப்பு தந்த நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நிகழ்சியின் முடிவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் அனைவரும் ஊர் வலமாக வந்து பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த னர். இதில் ராஜகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டார்.
- பாரம்பரிய நெல் ரகங்கள், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.
- மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு வேளாண்மை துறை விதைப் பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் மரபு சார் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை இயக்குனர் மதியழகன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மணிமாறன், மாவட்ட ஊராட்சிகவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் அனைவரையும் வரவேற்றார். பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
வேளாண் வல்லுநர்கள், மூத்த விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயி களுக்கு தேவையாள தொழி ல்நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பின் முக்கியதுவத்தை பற்றி பேசினர்.
முன்னதாக கண்காட் சியை நிவேதா முருகன் எம். எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல் வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார், மயிலாடுதுறை தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்மான இளைய பெருமாள், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்றன.
- மாணவர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
சீர்காழி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் நடத்தும் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி -வினா போட்டி சீர்காழியில் நடைபெற்றது.
13 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மதன்ராஜ், ஜெய் சபரிவாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், யோஷ்வின், கீர்த்திவாசன், ஸ்ரீவர்சன் ஆகியோர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடமும் பெற்று சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
இவர்களை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ண முதலியார், நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை, வழிகாட்டி ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழரசன், கிரிஜாபாய் ஆகியோர் பாராட்டினர்.
- தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
- தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.
மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.
- கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
- அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.
ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,
நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.
முழுமதி இமயவரம்பன்:
எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வேல்முருகன் :
அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.
நாகரத்தினம்:
8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.
ஜெயந்திபாபு:
பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.
முபாரக்அலி:
பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவதாஸ்:
எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.
இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.
ராஜசேகர்:
சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.
நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.
மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.
- சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
- தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவர்தெரு உள்ளது.
இந்த கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 400 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்த சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று ஒரு மாத காலமே ஆகிறது.
இந்த சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று திடீரென சம்பவ இடத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் நேரில் சென்று புதியதாக போடப்பட்ட தார் சாலையை கடப்பாறையால் குத்தியும், கிளறியும் தார் மற்றும் கருங்கல் ஜல்லிகளை வெளியே எடுத்து, தரமாக போடப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்தனர்.
- கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.
காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.
அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.
- கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
- நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.
சீர்காழி:
சீர்காழியை அருகே உள்ள முதலை மேடு திட்டும், நாதல் படுகை கிராம மக்கள் ஒன்று திரண்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்தனர்.
பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,
தற்போது திட்டு கிராமத்தில் செய்து வரும் நிவாரண பணிகள் தற்காலிகமானது.
நிரந்தரமாக தங்கள் பகுதிகளுக்கு செய்து தரவேண்டிய பணிகளாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.
திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவனை அமைத்து தரவேண்டும்.
கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பரிசீலனை செய்யவில்லை என்றால் வருகின்ற 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
தரங்கம்பாடி:
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-
என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.
நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.
அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.
அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.
எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.






