search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம்- நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை
    X

    சீர்காழியில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம்- நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை

    • கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.

    ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.

    முழுமதி இமயவரம்பன்:

    எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வேல்முருகன் :

    அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.

    நாகரத்தினம்:

    8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.

    ஜெயந்திபாபு:

    பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.

    முபாரக்அலி:

    பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ்:

    எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.

    இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    ராஜசேகர்:

    சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.

    மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.

    Next Story
    ×