search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elasticity"

    • மாற்று திறனாளி பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க புத்தகத்திருவிழாவிற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்டார்
    • ஏராளமானவர்கள் புத்தகப்பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-வாசுகி தம்பதியினருக்கு சுகுணா (33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுகந்திக்கு திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகுணா பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.எட்டாம் வகுப்புவரை படித்துள்ள சுகுணா சிறுவயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு ஏராளமான புத்தகங்களை பலரும் பரிசளித்தனர்.பின்னர் இது குறித்து பேசிய சுகுணா,  10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக்கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்ததை அளித்துள்ளது. தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில்கொண்டு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.சுகுணாவின் தாயார் வாசுகி கூறுகையில், எனது மூத்த மகள் சுகுணாவை இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

    • கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.

    ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.

    முழுமதி இமயவரம்பன்:

    எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வேல்முருகன் :

    அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.

    நாகரத்தினம்:

    8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.

    ஜெயந்திபாபு:

    பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.

    முபாரக்அலி:

    பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ்:

    எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.

    இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    ராஜசேகர்:

    சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.

    மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.

    ×