என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுடன் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல்.
வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்றன.
- மாணவர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
சீர்காழி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் நடத்தும் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி -வினா போட்டி சீர்காழியில் நடைபெற்றது.
13 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மதன்ராஜ், ஜெய் சபரிவாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், யோஷ்வின், கீர்த்திவாசன், ஸ்ரீவர்சன் ஆகியோர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடமும் பெற்று சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.
இவர்களை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ண முதலியார், நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை, வழிகாட்டி ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழரசன், கிரிஜாபாய் ஆகியோர் பாராட்டினர்.
Next Story






