என் மலர்
மதுரை
- அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நாளை (20-ந் தேதி) நடக்கிறது.
- இதில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை
மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இவர்களது திருமணம் நாளை (20-ந் தேதி) காலை அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடக்கிறது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமை தாங்குகிறார் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- தமிழகத்தில் என்றுமே பா.ஜ.க. வளராது என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
- பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா, தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன், பணியாளர் நலன் தெற்கு மாவட்ட தலைவர் பொன்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் 7 அரை கோடி பேருக்கு வங்கி கணக்கை தொடங்கி வைத்தது. ஆனால் தற்போது அந்த வங்கி கணக்கு மூலம் ஏழைகளிடம் குறைந்தபட்சம் பணம் இல்லை எனக்கூறி வங்கிகள் பணத்தை பிடுங்கி வருகின்றது.
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய சீமானை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை சட்ட விரோதமானது.
தமிழகத்தில் பா.ஜ.க. வில் ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் இணைந்துள்ளனர். இதைப்பார்த்து அமைச்சர் பா.ஜ.க. அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என கூறியிருக்கலாம். பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் மனதில் என்றுமே இடமில்லை. தமிழக மண் எப்போதும் பா.ஜ.க.விற்கு எதிரானது. அவர்கள் இங்கு என்றுமே வளர முடியாது. பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காசிநாதன், கார்த்திக், வினோத் ராஜா, சவுந்தரபாண்டியன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
திருமங்கலம்
தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மட்டுமே அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கல்லூரி தற்காலிகமாக விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
- தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
மதுரை
தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் 24-ந் தேதி காலை 11 மணிக்குள் ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் காவல் வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. விற்பனை வரியுடன் சேர்த்து 24-ந் தேதி உடனே செலுத்த வேண்டும்.
மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி தளவாய் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
- பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
- குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம்
தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.
குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது65), இவர் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சித்ரா. இவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.
கள்ளிக்குடி அருகே உள்ள தென்னமநல்லூரில் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ரா இறந்துவிட்டார். இதனால் ராமநாதன் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருமங்க லத்தில் உள்ள ராமநாதன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய ராமநாதன் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- வெற்றிவேல் முருகனுக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
- சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு கோமதி என்ற மனைவியும், வெற்றிவேல் முருகன் (வயது28) என்ற மகனும் உள்ளனர்.
குருநாதனும், அவரது மகனும் மதுரையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் மதுரை அண்ணாநகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
இந்நிலையில் வெற்றிவேல் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பாலை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து, அதே பகுதியில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
வெற்றிவேல் முருகனுக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
நேற்று காலையும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரி தாக்கி உள்ளார். பின்பு சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.
கணவரின் சித்ரவதை தாங்காத சிறுமி, அதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசி தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.
அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்ததற்கான காயங்கள் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது வெற்றிவேல் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தியதாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை திருமணம் செய்து அடித்து உதைத்து துன்புறுத்தி பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் குறித்து வெற்றிவேல் முருகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சிறுமியை அடித்து துன்புறுத்துதல், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெற்றிவேல் முருகனின் தாய் கோமதி, நரிக்குடி பகுதியில் தி.மு.க. நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.
- அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளேன். என்னை உலகறிய செய்ய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நானும் என் குடும்பமும் உயிர் உள்ள வரை சேவையாற்றுவோம்.
மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன.
நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் குத்து வெட்டும் நடந்ததால் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதையே கைவிட்டு விட்டார்.
ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்வேகம் காரணமாக இரண்டு முறை சிறப்பான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதால் 27 விருதுகளை பெற்றோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.
ஆனால் இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.
இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களின் நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.
அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.
கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது. தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும்.
அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல் ேவார் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகரில் டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சில பெண்களும் ஈடுபட்டு ள்ளனர்.
பஸ்சில் அருகில் நிற்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சக பயணிகளுடன் கலந்து நிற்கும் கொள்ளை கும்பல் பயணிகள் அசந்த நேரத்தில் பணம்-நகையை திருடிச் செல்கின்றனர்.
மதுரை நகரில் குறிப்பிட்ட வழித்தடங்க ளில் 4 பெண்கள், 19 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 25). சம்பவத்தன்று மாலை இவர் மண்டேலா நகரில் இருந்து அரசு பஸ்சில் பழங்காநத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கற்பகவள்ளி வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.400 ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மதுரை பழங்காநத்தம், மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜோதிமணி (52). சம்பவத் தன்று காலை இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்மநபர், ஜோதிமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்துச்சென்றார்.
பழங்காநத்தம், பொட்டூரணி தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி லோகாமணி (50). இவர் சம்பவத்தன்று மதியம் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார். அதன் பிறகு பைக்காராவுக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 3 பவுன் நகையை திருடிச் சென்றார்.
மதுரை திருப்பரங்கு ன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பிறைகன்னி (55). இவர் சம்பவத்தன்று மதியம் ஆண்டாள்புரம் பஸ் நிலையத்தில் இருந்து அழகப்பன் நகருக்கு அரசு பஸ்சில் சென்றார்.
அப்போது மர்ம நபர் பிறைகண்ணி கொண்டு வந்திருந்த பையில் இருந்த 6 பவுன் தங்க வளையல், 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மேற்கண்ட 4 சம்பவங்களும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
- மதுரையில் ரோட்டோரத்தில் தூங்கிய வாலிபரை மிதித்து கொன்றது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்
மதுரை
மதுரை அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணன் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியே சுற்றுவது வழக்கம். சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் சரவணன் இரவு நேரங்களில் ரோடுகளில் சுற்றி அழைந்து பிளாட்பாரங்களிலேயே தூங்கி விடுவாராம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் தவிட்டுச்சந்தை ரோட்டோ ரத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் அங்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கொலை செய்தது யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அவர் பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் சரவணன் ரோட்டோரத்தில் தூங்கியிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் சரமாரியாக மிதிப்பது பதிவாகி உள்ளது. வலியால் துடித்த சரவணன் சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதும் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.
சரவணனை கொலை செய்த நபரும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
- திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3-வது மாடியில் ஒரு தளத்தை மட்டும் ஒதுக்கீடு செய்தது சரியல்ல. அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. அரசு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நிறை வேற்றாமல் உள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் கட்டிடங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் எந்த நேரத்தில் வருமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி அரசு உடனடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகம், பொதுப்ப ணித்துறை, வருவாய்த்துறை ஒன்றிணைந்து தமிழ்நாட்டின் ஒரே ஓமியோபதி கல்லூரியாக உள்ளதால் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்செல்வம், பொருளாளர் திருப்பதி, திருமங்கலம் நகர் செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சரவண பாண்டி, சிங்கராஜ்பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஷ், பேரவை பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதிசாமிநாதன், வாகைகுளம் சிவசக்தி, சிவபாண்டி, பொன்னமங்கலம் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.
- திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதனைத்தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை
திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, விடத்தகுளம் உதவி மருத்துவர் கஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






