என் மலர்
மதுரை
- மதுரை மக்களை கவர்ந்த சில்ப் பஜார் கண்காட்சி
- இந்த கண்காட்சி 28-ந்தேதியுடன் முடிகிறது.
மதுரை
மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனமும் மத்திய ஜவுளி துறையும் இணைந்து மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் காந்தி சில்க் பஜார் என்ற பெயரில் அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சி நடந்து வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந் தேதியுடன் முடி வடைகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
பெட்கிராட் தாளாளர் சுப்புராம் மற்றும் மத்திய ஜவுளி துறை அதிகாரிகள் பிரபாகரன், ரூப் சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள கலைநயம் மிக்க பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் மனதை கவரும் வாழை நாரில் உருவான பூஜை கூடை, பழக்கூடை, மற்றும் மதுரை சுங்குடி சேலைகள் விதவிதமான வண்ணங்களில் கொட்டிக் கிடக்கின்றன,
பெண்களை கவரும் ஐம்பொன்னால் ஆன அணிகலன்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறது. நமது கலாச்சாரத்தை நினைவு படுத்தும் கேரள களி மண்ணால் செய்யப்பட்ட பானை, குவளை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஆயக்குடி பித்தளை விளக்கு, பூஜை பொருள்கள் நம் வாழ்வில் வளம் சேர்க்கும் சுவாமி உருவங்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட குஜராத் சுரிதார்கள், கைப்பைகள் மதுரை மக்களை உள்ளங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கண்காட்சியில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கும் வகையில் மிக குறைந்த விலையில் கைத்தறி ஆடைகள், குர்தா மற்றும் சட்டைகள் வரிசை வரிசையாய் அணிவகுத்து காணப்படுகின்றன. கொல்கத்தா கறுப்பு மணலால் செய்யப்பட்ட டெரக்கோட்டா நகைகள், ஜெய்பூர் நகைகள், பெண்களை வெகுவாக கவர்ந்து வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இது தவிர மத்திய பிரதேசத்தின் பளபளப்பான குந்தன் கற்கள், வேலைப்பாடு நிறைந்த மேஜை விரிப்பு கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான வெட்டிவேர் விசிறி, நறுமணம் வீசும் மெழுகு வர்த்தி இவையும் வாடிக்கை யாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்பு மிக்க தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் மதுரையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பதால் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங்குகிறார்கள். இந்த கண்காட்சி இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறுகிறது. எனவே தின மும் காலை 10.30 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்த கண்காட்சியில் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருள்களை குறைந்த விலையில் வாங்கி பயனடைய வேண்டுமாறு கண்காட்சி பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
- கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்யானை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மேலூர் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயகூட கட்டுமான பணிகளை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது.
மேலூர்
மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்காடு சிவன் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மாவட்ட வேளாண் விற்பனை குழுதலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணைத்தலைவர் குலோத்துங்கன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலவளவு விஜயராகவன், கிடாரிபட்டி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும்.மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.
மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ெரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
- கஞ்சா விற்ற 8 பேரை கைது செய்தனர்.
- மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை சிலைமான் போலீசார் நேற்று ராமேசுவரம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 3 பேர் நின்றனர்.
எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அதில் 550 கிராம் கஞ்சா மற்றும் 720 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிலைமான் போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் தத்தனேரி, காந்தியார் தெரு ஜெகன் மகன் சந்தோஷ்குமார் (வயது 20), ரமேஷ் மகன் மணிகண்டன் (20), புளியங்குளம், பிள்ளையார் கோவில் தெரு முருகானந்தம் மகன் மணிமாறன் (21) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் சிலைமான் போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கீழமாத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 14 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மேற்கண்ட கும்பலிடம் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்களை பறி முதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர், முத்துராமலிங்கம் தெரு நாகராஜா (38), சோழவந்தான் பாலகிருஷ்ணன் (26) மேலநாச்சிகுளம், தெற்கு தெரு மருதபாண்டி (31) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் கஞ்சாவை கடத்தி வந்ததாக, மேற்கண்ட 3 பேரையும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேடப்பட்டி போலீசார் பூசலாபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி மணி பாண்டி (26), பூசலாபுரம் நாகு மகன் நந்தகுமார் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கல்லூரி பஸ் மோதியதில்1 மாணவர் பலியானார்.
- 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலூர்
மதுரை சிக்கந்தர் சாவடி யை சேர்ந்தவர் பிரவீன், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பயஸ், ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக தெரிகிறது.
அழகர்கோவில் அருகே சென்ற போது அவர்கள் படிக்கும் கல்லூரி பஸ்சும் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே ஒரு ஆட்டோ வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினர்.
அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவீன், முகமது பயஸ், சரவணன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.
இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.=
- திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
- பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
- பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது
மதுரை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராஜசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனக்கு சொந்தமான நிலத்தை மற்றொரு தரப்பி னர் மோசடி ஆவணங்கள் மூலம் பந்தல்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து ள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் எந்த உரிமையும் கோருவது கூடாது என்று 2020-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதுவரை அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டுவிட்டது. இறுதி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார்.
மனுதாரர் வக்கீல் மோகன் ஆஜராகி, மனுதா ரருக்கு சொந்தமான நிலத்தை 3-ம் தரப்பினர் உரிமை கோருகின்றனர். இதுசம்பந்தமாக உரிய உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி, மனுதாரர் விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அது சம்பந்தமாக விசாரித்துதான் முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை வருகிற 2-ந்தேதிக்குள் பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும்.
மனுதாரர் சொத்து ஆவணத்தில் தவறு நடந்திருந்தால் அதை பதிவுத்துறை தலைவர் தானாக முன்வந்து திருத்த வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் உரிமை கோரக்கூடாது. இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும்.
மதுரை
மதுரை திருப்பாலை தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையின் நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. திருப்பாலை தனியார் பள்ளியில் மாணவிகளை அழைத்து வர பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் பள்ளி பஸ்சில் நேற்று பழுதாகி நின்று விட்டது.
பள்ளி நிர்வாகம் கிட்டத்தட்ட 150 மாணவிகளை ஒரே பஸ்சில் அடைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அழகர்கோவில், மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மாணவிகளுக்கு பஸ்சில் இடம் கிடைக்கவில்லை.
அவர்கள் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தது. கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளி பஸ்சின் வாகன ஓட்டுநர், அதே பகுதியில் உள்ள சந்துக்குள் பஸ்சை 30 நிமிடமாக நிறுத்தி வைத்தார்.
பள்ளியில் இருந்து களைப்புடன் வீடு திரும்பிய மாணவிகளை, பஸ்சில் அடைத்து வைத்து காக்க வைத்ததால் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.
அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா ஆகிய 4 மாணவிகள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறுகையில், பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தது, ஒரே பஸ்சில் அதிக அளவில் மாணவிகளை அழைத்துசென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
மதுரை தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து தெருவுக்குள் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் அந்த வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை பாதுகாக்க முடியும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மேலவாசல், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). ஜவுளிக்கடை ஊழியர். இவரை நாய் கடித்து விட்டது. தடுப்பூசி போடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பழைய அரசு மருத்து வமனை சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து மதிச்சியம் போலீசில் புகார் செய்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முத்துமாரி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கரும்பாலை பி.டி. காலனியில் பதுங்கி இருந்த மணிமாறன் மகன் தினேஷ் (21), பாண்டி மகன் நாகராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
மதுரை பரசுராம் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ் (24). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அழகர் கோவில் ரோட்டுக்கு வந்தார். ஐ.டி.ஐ சந்திப்பில் பதுங்கி இருந்த வாலிபர் அரிவாள்முனையில் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய சம்பக்குளம் பாண்டியராஜ் என்ற அருண் என்பவரை கைது செய்தனர்.
- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
- குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சுமார் 1219 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 274 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
தமிழக அரசின் வருவாய் அனைத்து துறையிலும் உயர்த்து கொண்டிருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். வணிகவரி மற்றும் பதிவு துறை சார்பில் வரும் மார்ச் மாதத்திற்குள் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு ஈட்டி தர திட்டமிட்டுள்ளோம். தற்போது வரை ரூ.95 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளோம். முதியோர் உதவித்தொகை, விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகளிர் உதவித்தொகை, விபத்து காப்பீடு, வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முடுவார் பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் சமயலறை கூடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துராமன், ஜெயமணி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி, துணை தலைவர் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி, அணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், சந்தனகருப்பு, மருது, மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் வளர்ச்சித் துறை, பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






