என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்ப் பஜார்"

    • மதுரை மக்களை கவர்ந்த சில்ப் பஜார் கண்காட்சி
    • இந்த கண்காட்சி 28-ந்தேதியுடன் முடிகிறது.

    மதுரை

    மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனமும் மத்திய ஜவுளி துறையும் இணைந்து மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் காந்தி சில்க் பஜார் என்ற பெயரில் அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சி நடந்து வருகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந் தேதியுடன் முடி வடைகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தொடங்கி வைத்தார்.

    பெட்கிராட் தாளாளர் சுப்புராம் மற்றும் மத்திய ஜவுளி துறை அதிகாரிகள் பிரபாகரன், ரூப் சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள கலைநயம் மிக்க பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    மக்களின் மனதை கவரும் வாழை நாரில் உருவான பூஜை கூடை, பழக்கூடை, மற்றும் மதுரை சுங்குடி சேலைகள் விதவிதமான வண்ணங்களில் கொட்டிக் கிடக்கின்றன,

    பெண்களை கவரும் ஐம்பொன்னால் ஆன அணிகலன்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறது. நமது கலாச்சாரத்தை நினைவு படுத்தும் கேரள களி மண்ணால் செய்யப்பட்ட பானை, குவளை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஆயக்குடி பித்தளை விளக்கு, பூஜை பொருள்கள் நம் வாழ்வில் வளம் சேர்க்கும் சுவாமி உருவங்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட குஜராத் சுரிதார்கள், கைப்பைகள் மதுரை மக்களை உள்ளங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    மேலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கண்காட்சியில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கும் வகையில் மிக குறைந்த விலையில் கைத்தறி ஆடைகள், குர்தா மற்றும் சட்டைகள் வரிசை வரிசையாய் அணிவகுத்து காணப்படுகின்றன. கொல்கத்தா கறுப்பு மணலால் செய்யப்பட்ட டெரக்கோட்டா நகைகள், ஜெய்பூர் நகைகள், பெண்களை வெகுவாக கவர்ந்து வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

    இது தவிர மத்திய பிரதேசத்தின் பளபளப்பான குந்தன் கற்கள், வேலைப்பாடு நிறைந்த மேஜை விரிப்பு கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான வெட்டிவேர் விசிறி, நறுமணம் வீசும் மெழுகு வர்த்தி இவையும் வாடிக்கை யாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்பு மிக்க தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் மதுரையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பதால் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங்குகிறார்கள். இந்த கண்காட்சி இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறுகிறது. எனவே தின மும் காலை 10.30 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்த கண்காட்சியில் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருள்களை குறைந்த விலையில் வாங்கி பயனடைய வேண்டுமாறு கண்காட்சி பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ×