என் மலர்tooltip icon

    மதுரை

    • நல்ல மருது நினைவு நாளை முன்னிட்டு 200 பேர் ரத்ததானமும், 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    • இதனை முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியில் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி ரத்தம் கொடுத்து ரத்த தானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக நல்ல மருதுவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் போஸ் முத்தையா, பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர் வாசு, சோலையழகுபுரம் கண்ணன், வக்கீல் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கவுதம் போஸ், விஷ்ணுவரதன், ஆதித்யா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.

    • நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்? ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    • விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை அய்யர்பங்க ளாவைச் சேர்ந்த கோவிந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளேன்.

    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் ஆகும். மழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர். வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் கருவேல மரங்களால் ஆக்கிரமித்து ள்ளன. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது.

    இங்குள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    இதே போல, பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது.

    இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இன்னும் சில மாதங்களில் வேளாங்குளம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

    இங்குள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வசதி செய்து தரும்படியும், கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எங்கள் மனுவின் அடிப்படையில் வேளா ங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சி.எம். ஆறுமுகம் ஆஜராகி, வேலாங்குளம் கிராமத்தினரின் வாழ்வா தாரம் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. அதற்கு ஆதாரமாக உள்ள கண்மாய் வரத்து கால்வாய்களை தூர் வாருவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேளாங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமை க்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    பின்னர் நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வீடியோ அனுப்பியதால் போலீஸ்காரர் பணிநீக்கமா? அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தனர்.
    • உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராகிம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆயுதப்படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தேன். கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரத்திடம் எனக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க கோரி மனு அளித்தேன். இதற்கு போலீஸ் கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறி சாதாரண விடுப்பு வழங்கினார்.

    இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை வீடியோ வெளியிட்டேன்.

    அது சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. எனது தரப்பு கருத்துகளை கேட்காமலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்து என்னை நிரந்தரமாக நீக்கிவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல.

    ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் சண்முகசுந்தரம், டிக்-டாக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் போலீஸ் சீருடையில் வெளியிட்டார்.

    அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் எச்சரித்து அதிகாரிகளால் மன்னிக்க ப்பட்டது. இதுபோல பல போலீஸ்காரர்கள் மன அழுத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் சில போலீஸ்காரர்களை மட்டும் டி.ஜி.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வீடியோவை வெளியிட்டதாகவும், முக கவசம் அணியவில்லை என்று கூறியும் என்னை பணி நீக்கம் செய்துள்ளனர்.

    உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.

    தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    • மேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மேலூர்

    மேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை சார்பாக காயகல்பம்-2022 திட்டத்தின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளரும், தென்காசி அரசு மருத்துவமனையின் டாக்டருமான கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் காளிராஜ், செவிலியர் அலமேலு மங்கயற்கரசி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனை வளாகம், உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, சமையல் அறை, பிரசவ வார்டு, மருத்துவ அறை, பரிசோதனை ஆய்வு கூடம், அலுவலகம் ஆகியவை தூய்மையாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மேலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்க ம்பட்டி -ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது.

    இந்த வழியாக அதிக கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.

    மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

    இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.

    இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான்.
    • மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது.

    குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த ஷாரிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் போலீசார் மைசூரில் உள்ள ஷாரிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன சாதனங்கள் உதவியுடன், ஷாரிக் செல்போன் நம்பரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் அவர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நவம்பர் முதல் வாரம் 2 நாட்கள் தங்கி இருந்தது தெரியவந்தது.

    ஷாரிக் மதுரைக்கு ஏன் வந்தார்? அவர் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மங்களூரு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் 10 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரை நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.

    தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து, மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சூர்யா நகரில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓட்டல்களில் உள்ள வருகை பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான சிலரின் ஆதார் பதிவுகள் உண்மைதானா? என்று அதிநவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    மேலும் தனிப்படை போலீசார் ஓட்டலுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஓட்டல் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் டிரைவர்களிடமும் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.

    மதுரையில் தனிப்படை போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர்.

    மதுரையில் போலீசாரின் விசாரணையின்போது லோக்கல் போலீசார் மட்டுமின்றி மத்திய புலனாய்வு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    ஷாரிக் ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டு பெற்றுள்ளார். அவற்றை பயன்படுத்தி மதுரை ஓட்டலில் தங்கி இருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். எனவே அவன் எந்த நோக்கத்துக்காக மதுரை வந்து இருந்தான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

    மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மதுரை ஓட்டலில் தங்கி இருந்த ஷாரிக்கை நேரில் சந்தித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் மதுரை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ஷாரிக் ஓட்டலில் இருந்து எந்ததெந்த இடங்களுக்கு சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்தனர்? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கர்நாடக தனிப்படை போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
    • பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.

    இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.
    • 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் (வயது 43) போலீஸ் ஏட்டுவாக உள்ளார். இவர் இதற்கு முன்பு கூடல்புதூரில் போலீஸ்காரராக இருந்தார்.

    அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சுவிதா மறுத்து விட்டார். மறுநாள் சுவிதா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரலேகா, உஷா ஆகியோரை ஏட்டு ராமச்சந்திரன் மதுரைக்கு அழைத்து சென்று விட்டார். கொள்ளையன் கணேசன், தந்தை துரைசாமி, நண்பர்கள் சீனிவாசன், ராஜாவுடன் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.

    அவர்களிடம் ஏட்டு ராமச்சந்திரன், மரியாதையாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்து விடு. இல்லையெனில் உன் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதற்கு துரைசாமி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தார்.

    பின்னர் ஏட்டு ராமச்சந்திரன், அவரிடம் கூகுள்-பே மூலம் ரூ.15 ஆயிரத்தை பெற்றார். அதன் பிறகு ராமச்சந்திரன் பல்வேறு தருணங்களில், துரைசாமி குடும்பத்தினரிடம் ரூ.72 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

    இது குறித்து சுவிதா, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜாதி, மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.

    சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி இன்று காலை சுவாதி நீதிமன்ற வளாகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் காத்திருந்தார். அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் அழைத்து வந்ததில் ஏதேனும் சிரமம் இருந்ததா? என கேட்டனர். அதற்கு சுவாதி உரிய பாதுகாப்புடன் அழைத்து வந்ததாக தெரிவித்தார். கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் ஆம் என்று தெரிவித்தார்.

    23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என கேட்கப்பட்டது. ஆனால் சுவாதி அன்று பார்க்கவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யாரென கேள்வி எழுப்பினர்.

    ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சுவாதி தெரிவித்தார். பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதில் தெரிவித்தார். மீண்டும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அப்போது சுவாதி வீடியோவில் இருப்பதுதான் இல்லை என்று கண்ணீர் மல்க சுவாதி தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

    தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது. வீடியோவில் உங்களை பார்த்து நீங்கள் தெரியவில்லை என கூறுகிறீர்கள். ஜாதியை விட சத்தியம் முக்கியம்.

    நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் தற்போது முரணான தகவல்களை கூறி வருகிறீர்கள். மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர்.

    இதனை கேட்டவுடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர்விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து 15 நிமிடத்திற்கு பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைக்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, சுவாதி வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நல்ல மருது நினைவு நாளில் 5000 பேருக்கு எஸ்ஸார் கோபி அன்னதானம் வழங்குகிறார்.
    • இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த அன்னதானத்தை முன்னாள் மாநகர வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைக்கிறார்.இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக நல்லமருதுவின் திருவுருவப்படத்திற்கு எஸ்ஸார் கோபி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதனை தொடர்ந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் முன்னாள் நகராட்சி சேர்மனும் மாநகராட்சி 84- வார்டு கவுன்சிலருமான போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி திமுக செயலாளர் ஈஸ்வரன்,வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற கவுன்சிலர் ராஜரத்தினம், சோலை அழகுபுரம் பகுதி துணைச் செயலாளர் கண்ணன்,வட்டக் கழக துணை செயலாளர் வழக்கறிஞர் விஜயன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    ×