search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் கொள்ளையன் மனைவியிடம் பணம் பறித்த போலீஸ் ஏட்டு- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
    X

    மதுரையில் கொள்ளையன் மனைவியிடம் பணம் பறித்த போலீஸ் ஏட்டு- லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

    • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர்.
    • 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் (வயது 43) போலீஸ் ஏட்டுவாக உள்ளார். இவர் இதற்கு முன்பு கூடல்புதூரில் போலீஸ்காரராக இருந்தார்.

    அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, துத்திமேடை சேர்ந்த கணேஷ் என்பவரை, கூடல் புதூர் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், உமரப்பேட்டை காவல் நிலையத்தில் கணேஷ் மனைவி சுவிதாவிடம் ஏட்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சுவிதா மறுத்து விட்டார். மறுநாள் சுவிதா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரலேகா, உஷா ஆகியோரை ஏட்டு ராமச்சந்திரன் மதுரைக்கு அழைத்து சென்று விட்டார். கொள்ளையன் கணேசன், தந்தை துரைசாமி, நண்பர்கள் சீனிவாசன், ராஜாவுடன் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.

    அவர்களிடம் ஏட்டு ராமச்சந்திரன், மரியாதையாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்து விடு. இல்லையெனில் உன் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதற்கு துரைசாமி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தார்.

    பின்னர் ஏட்டு ராமச்சந்திரன், அவரிடம் கூகுள்-பே மூலம் ரூ.15 ஆயிரத்தை பெற்றார். அதன் பிறகு ராமச்சந்திரன் பல்வேறு தருணங்களில், துரைசாமி குடும்பத்தினரிடம் ரூ.72 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

    இது குறித்து சுவிதா, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×