என் மலர்
மதுரை
- மதுரையில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்கப்பட்டது.
- யார் அவர்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காந்தி மியூசியம் ராஜாஜி பூங்கா அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தத்தனேரி கே.வி. சாலை, அ.தி.மு.க. அலுவலகம் முன்பு 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விளாங்குடி கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுமா?
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.
பக்தர்கள் சிரமம்
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைெபறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் அதிக அளவில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்களுக்கு 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பொது தரிசனமும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த கோவிலில் குறைந்த அளவு கூட்டம் இருந்தாலும் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கியூ வரிசைகளை அமைத்து நேரடியாக தரிசனம் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தால்கூட பெரிய கூட்டம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் வெளியூர் பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் பொது தரிசனத்திற்கு எவ்வளவு கூட்டம் உள்ளதோ? அதே அளவுக்கு சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை இங்குமட்டும்தான் காண முடிகிறது. அதுவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய தனி கட்டணம், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய தனி கட்டணம் என 2 வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் கோவிலில் நுழையும்போது செல்போன்களும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கும் தனி கட்டணம் உள்ளது. இதுமட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் கட்டுபாடுகளை மீறி அழைத்து செல்லப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.
உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தாலும் அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பூஜை நேரங்களில் மணி கணக்கில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அப்போது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-
மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பெல்லாம் நேரடியாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தற்போது நீண்ட கியூ வரிசை பாதைகளை அமைத்து கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டம் இருப்பதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வரிசை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் தேவையின்றி நேர விரையம் ஏற்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
கோவிலில் பல சிலைகள் சேதமாகி உள்ளது. அவைகளை அவ்வப்போது சீரமைத்தால் கோவில் இன்னும் பொலிவுடன் திகழும். ஆனால் கும்பாபிஷேக காலங்களில் மட்டுமே திருப்பணிகள் செய்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டுமின்றி சிறப்பு கட்டண வசூல் உள்பட பல்வேறு வருமானங்கள் உள்ளது. அதில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வதில்லை. உபயத்தில் மட்டுமே பணிகளை செய்கின்றனர். கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.
மேலும் உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீபத்திருவிழா இன்று தொடங்கி டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 5-ந்தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கி அடுத்த டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் பதினாறுகால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகின்ற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வருகின்ற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது.
பதினாறுகால் மண்டப வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
- பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.
மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரையில் வீட்டு மனை குலுக்கல்; நாளை மறுநாள் நடக்கிறது.
- தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற் பொறியாளர்கள் பழனிக்குமார், இருளப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.
மதுரை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் துணைக்கோள் நகரக் கோட்டத்துக்குட்பட்ட உச்சப்பட்டியில் 1, 3, 4, 5, 6,7,8. தோப்பூரில் 2, 3, 4, 5 மற்றும் தோப்பூர் தன்னிறைவு திட்ட குடியிருப்புகளில் 1391 மனைகள் ஆகியவை உள்ளன.
இவை குலுக்கல் முறையில் மொத்தக் கொள்முதல் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஒற்றை சாளர அலகுகள் தேர்வு, வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. மதுரை உச்சப்பட்டி- தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலக வளாகத்தில் நடக்க உள்ள குலுக்கல் நிகழ்வை யூ- டியூப் http:s//youtube.com/@tnhbhh இணைய முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நேரிலும் வரலாம். மேற்கண்ட தகவலை உச்சப்பட்டி- தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற் பொறியாளர்கள் பழனிக்குமார், இருளப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.
- திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
- திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை (28-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்க குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருக ப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது.
இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- திருமங்கலம்-காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
- தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது.
திருமங்கலம்
தமிழக முழுவதும் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்தவர்கள் மடக்கி விடக்கூடாது, பொத்தான் போட்டு மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனும திக்கப்பட்டனர். திருமங்கலம் வி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் 2000 பேர் தேர்வு எழுதினர்.
- போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.
- கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22), சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதனை அவர்கள் விற்பதற்காக ெகாண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரை-12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு; 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
- தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

தேர்வர்களின் செல்போன்களை ேபாலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.(இடம்: அமெரிக்கன் கல்லூரி).
.............
மதுரை
தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது.
இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி விண்ணப்ப தாரர்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்குள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.
மதுரை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கும் 12 மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
திருமங்கலம் வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மதுரையில் நாளை போலீஸ் எழுத்து தேர்வை 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
- மதுரை மாவட்டத்தின் 12 தேர்வு மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் 2022 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நாளை (26-ந் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 12 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு 11 ஆயிரத்து 500 பேர் எழுத்து தேர்வை எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு, எழுத்து அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்க்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, பரீட்சை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- மதுரை கொள்ளை அடிக்க பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை
மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்க ளுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியி ருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.
5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் தத்தனேரி, பாரதிநகர் சசிகுமார் (30), முனியாண்டி கோவில் தெரு முட்டக்கண் மகாராஜன் (23), அகிம்சாபுரம் மதன்கு மார்(27), ஓடக்கரை, முத்துராமலிங்கம் தெரு கஞ்சிமுட்டி ஜெயபாண்டி ( 33), தத்தனேரி, சிவகாமி நகர் கிடாரி கார்த்திக்(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.எஸ்.காலனி, கருமா ரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
- மதுரை பேச்சிக்குளத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிக்குளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இயக்குநர் சரவணன் மற்றும் இணை இயக்குநர் நடராஜன் ஆகியோரின் ஆலோசனைப்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கால்நடை மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். பேச்சிக்குளம் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி வாசு, துணைத்தலைவர் கார்த்திக் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், கோழிகளுக்கு வெள்ளை கழிதல் தடுப்பூசியும், கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்குழு நீக்கம் மருந்து கொடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்து மாவு,பதப்படுத்திய புல் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. இது தவிர சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
முகாமில் ஊமச்சிகுளம், பேச்சிக்குளம், வீரபாண்டி ஊராட்சி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர்கள் கலைவாணி,கோவிந்தன், சுகப்பிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலாவதி, ஜெயதேவி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.






