என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happening"

    • மதுரையில் வீட்டு மனை குலுக்கல்; நாளை மறுநாள் நடக்கிறது.
    • தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற் பொறியாளர்கள் பழனிக்குமார், இருளப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் துணைக்கோள் நகரக் கோட்டத்துக்குட்பட்ட உச்சப்பட்டியில் 1, 3, 4, 5, 6,7,8. தோப்பூரில் 2, 3, 4, 5 மற்றும் தோப்பூர் தன்னிறைவு திட்ட குடியிருப்புகளில் 1391 மனைகள் ஆகியவை உள்ளன.

    இவை குலுக்கல் முறையில் மொத்தக் கொள்முதல் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான ஒற்றை சாளர அலகுகள் தேர்வு, வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. மதுரை உச்சப்பட்டி- தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலக வளாகத்தில் நடக்க உள்ள குலுக்கல் நிகழ்வை யூ- டியூப் http:s//youtube.com/@tnhbhh இணைய முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நேரிலும் வரலாம். மேற்கண்ட தகவலை உச்சப்பட்டி- தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட செயற் பொறியாளர்கள் பழனிக்குமார், இருளப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

    ×