என் மலர்tooltip icon

    மதுரை

    • அலங்காநல்லூரில்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரத்தை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணைத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, காளிதாஸ், மாவட்ட வள பயிற்றுநர் தேவி, வட்டார இயக்க மேலாளர் மகாலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, கலா ராணி, தேவி, முத்துச்செல்வி, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் மரியா நன்றி கூறினார்.

    • மதுரையில் ரெயில்வே பார்சல்களை தபால்காரர் மூலம் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது.

    மதுரை

    பயணிகள் ரெயில்களில் சரக்கு போக்குவரத்துக்கு என தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதேபோல தபால்கள் பயணிகள் ரெயில்களில் தனி பெட்டிகளில் அல்லது சரக்கு பெட்டிகளில் ரெயில் மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

    வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரெயில்வேயும், தபால் துறையும் இணைந்து ரெயில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறது. சூரத்-வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த சேவையில் தபால் துறை வாடிக்கையாளர்களிடம் இருந்து சரக்குகளை பெற்று ரெயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும். பின்பு பார்சல் சேரும் ரெயில் நிலையத்திலும் ரெயிலில் வந்த பார்சலை பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.

    இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து நேரடியாக வாடிக்கை யாளரின் வாசலுக்கே சென்று சேரும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கும் இந்த திட்டத்தை மற்ற பகுதிகளிலும் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் ரெயில்வே துறை, தபால் துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் ரெயில்வே வாரிய திட்ட இயக்குநர் ஜி.வி.எல்.சத்யகுமார், மதுரை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர்.

    இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • செங்கப்படை சாலையில் உண்டியல் ரோட்டோரமாக கிடந்தது.
    • போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் போலீஸ் சரகத்தில் உள்ளது பழமையான பராசக்தி காளியம்மன் கோவில். இந்த கோவிலில் 4 அடி உயரமுள்ள 2 உண்டியல்கள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல பூசாரி பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் வந்து கோவிலை திறந்தபோது ஒரு உண்டியல் காணாமல் போயிருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உண்டியலை தேடிப்பார்த்துள்ளனர்.

    அப்போது செங்கப்படை சாலையில் உண்டியல் ரோட்டோரமாக கிடந்தது. ஆனால் அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ. 20 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கோவில் எதிர்ப்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உண்டியலை தூக்கிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி பால சுப்பிரமணியன் வில்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த துணிகர திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார்.

    எனவே உசிலம்பட்டி மின் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பால கிருஷ்ணன், பழனிவேல், முத்துக்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் "ஆயுஷ் மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு ஒருசில ஏஜென்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    ஆனால் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை விளாச்சேரி ஊராட்சி மன்ற வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் "ஆயுஷ்மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டை வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

    அந்த கும்பலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 5 பேர் கொண்ட கும்பல் பணம் வசூலித்தது உண்மை என தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த நடேஷ்குமார், வெங்கடசுப்பு நரசிம்மன், ராஜா, லோகசுந்தர் ஆகிய 5 பேர் மீது திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தந்தை பலி, மகன் படுகாயம் அடைந்தார்.
    • இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சியை சேர்ந்தவர் அய்யனார் (வயது60). இவரது மகன் அழகுராஜா (25).

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தந்தையும், மகனும் காலையில் கறி எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தென்பழஞ்சி கண்மாய் அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் அய்யனார் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழி யில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அழகு பாண்டி காமராஜர் பல்கலைக்கழக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மதுரையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மதுரை

    ஆங்கில புத்தாண்டுக்கு 13 நாட்களே உள்ளன. இதையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாது காப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் தொடர்புடைய சுமார் 1000 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் ஜாமீனில் விடு தலை செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனரா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் குற்ற சம்பவங்க ளில் மீண்டும் ஈடுபட தயா ராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்த னர்.

    இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
    • 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை மாநகரில் காளவாசல்-பைபாஸ் ரோடு குறிப்பிடத்தக்கது. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மதுரை அழகப்பன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அதில், காளவாசல்- பைபாஸ் ரோட்டில் சாலை யோரம் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மதுரை மாநக ராட்சி பதில் அளித்துள்ளது. அதில், பழங்காநத்தம் முதல் ஆரப்பாளையம் வரையிலான பைபாஸ் ரோட்டில் 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அவை மாநக ராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும் பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கடைகள் அமைந்து இருப்ப தால் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலை யிட்டு காளவாசல்- பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கர்ப்பிணி பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (19). இருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. கர்ப்பிணியான சிவரஞ்சனி கடந்த 7-ந்தேதி இரவு தனது அண்ணன் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கணவர் கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முடுவார்பட்டி ஊராட்சி மயானம் சீரமைப்பு பணி நடந்தது.
    • மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. அதன் பேரில் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் முன்னிலையில் முடுவார்பட்டி மயானத்தின் முன்பகுதி, புதர் மண்டி காட்சியளித்த நிலையில் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

    மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது. 

    • திருமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருமங்கலம் ஜவகர்நகர் ரவுண்டானாவில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். நகர் செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேசன், நகர்மன்ற தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குன்னூர் ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநில அணி நிர்வாகிகள் முத்துராமலிங்கம்,கொடிசந்திரசேகர், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், செல்வம்.மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கேசுவரன், பாண்டி, முருகன், கிருத்திகா தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செய லாளர் மதன்குமார் நன்றி கூறினார்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஏ.டி.எம். மெக்கானிக் பலியானார்.
    • முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முத்துக்குமார் (வயது 36). இவர் ஏ.டி.எம். மெக்கானிக்காக பணிபுரிந்தார்.

    நேற்று மாலை இவர் அருப்புக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவனியாபுரம் அருகே உள்ள பெருங்குடி அருகே வந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனம் எந்தவித சைகையும் செய்யாமல் திடீரென்று திரும்பியது.

    இதனால் முத்துக்குமார் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    ×