search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி
    X

    மதுரை வந்த கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு நியாய விலை கடை தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் பிச்சை, மாவட்ட தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் செல்லப்பாண்டி, பொருளாளர் அண்ணாத்துரை ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.

    பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி

    • பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பால கிருஷ்ணன், பழனிவேல், முத்துக்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் "ஆயுஷ் மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு ஒருசில ஏஜென்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    ஆனால் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை விளாச்சேரி ஊராட்சி மன்ற வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் "ஆயுஷ்மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டை வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

    அந்த கும்பலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 5 பேர் கொண்ட கும்பல் பணம் வசூலித்தது உண்மை என தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த நடேஷ்குமார், வெங்கடசுப்பு நரசிம்மன், ராஜா, லோகசுந்தர் ஆகிய 5 பேர் மீது திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×