என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்
- திருமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.
திருமங்கலம்
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருமங்கலம் ஜவகர்நகர் ரவுண்டானாவில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். நகர் செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் பாஸ்கர், முத்துகணேசன், நகர்மன்ற தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குன்னூர் ஜாகீர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில அணி நிர்வாகிகள் முத்துராமலிங்கம்,கொடிசந்திரசேகர், ஐ.டி.விங் மதுரை மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், ஆதிமூலம், செல்வம்.மாவட்ட அணி அமைப்பாளர்கள் தங்கேசுவரன், பாண்டி, முருகன், கிருத்திகா தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செய லாளர் மதன்குமார் நன்றி கூறினார்.






