என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைபாஸ் ரோடு"

    • பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
    • 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை மாநகரில் காளவாசல்-பைபாஸ் ரோடு குறிப்பிடத்தக்கது. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மதுரை அழகப்பன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அதில், காளவாசல்- பைபாஸ் ரோட்டில் சாலை யோரம் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மதுரை மாநக ராட்சி பதில் அளித்துள்ளது. அதில், பழங்காநத்தம் முதல் ஆரப்பாளையம் வரையிலான பைபாஸ் ரோட்டில் 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அவை மாநக ராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும் பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கடைகள் அமைந்து இருப்ப தால் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலை யிட்டு காளவாசல்- பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×