என் மலர்tooltip icon

    மதுரை

    • வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலாளர் அருணா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் சாத்தையாறு உபவடி நிலப்பகுதி நீரேத்தானில் வயல்வெளிப்பள்ளி செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

    வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். நடமாடும் மண் மாதிரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர் இந்து, மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்யும் முறை பற்றி விளக்க மளித்தார்.

    வேளாண்மை அலுவலர் சத்தியவாணி விதை நேர்த்தி செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி எடுத்துக்கூறினார். கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இதில் வேளாண்மை அலுவலர் டார்வின், உதவி அலுவலர் பாண்டியராஜன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை ேபாலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் பருவ பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு.
    • மொத்தம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல்.

    தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1239 மில்லியன் கனஅடி நீரில், 02.01.2023 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் மொத்தம் 690 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை அணையிலிருந்து திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. 


    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் இரண்டாம் பருவ பாசனத்திற்கு 01.01.2023 முதல் 30.04.2023 வரை 120 நாட்களுக்கு, 5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நாள் ஒன்றுக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 57 லட்சம் வரை பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தனர். இதற்கான பணத்தை அவர்கள் பல ஆண்டுகளாக செலுத்த வில்லை.

    அந்த வகையில் பாரதி சரவணன் குடும்பத்தினர் ரூ. 57 லட்சம் வரை தர வேண்டியுள்ளது. நாங்கள் பணத்தை கேட்டோம். அதற்கு அவர்கள், 'அதோ தருகிறோம், இதோ தருகிறோம்' என்று கூறி அலைகழித்தனர். இந்த

    நிலையில் எனது கணவர் கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக, கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நான், எனது தந்தை பெரியசாமி, தாய் ராஜேஸ்வரி, பெரியம்மாள் ராமலட்சுமி ஆகிய 3 பேரும் மதுரைக்கு வந்தோம்.

    பாரதி சரவணன் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 57 லட்சத்தை கேட்டோம். அவர்கள் தர மறுத்தது மட்டுமின்றி, அவதூறாக பேசினர். இதை எனது தந்தை தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி, உறவினர் குட்டி கார்த்திக் ஆகிய 4 பேரும் எங்களை உருட்டு கட்டையால் தாக்கினர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பாரதி சரவணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, தங்கை மகாலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான உறவினர் குட்டி கார்த்திக்கை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கரும்பு வழங்கப்படுகிறது.
    • மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கியதற்கு காரணம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பயந்து அல்ல.

    2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு முழுமையாக ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முறையாக கிடைக்கும். அதில் எந்த தங்கு தடை இருக்காது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மதுரை மாநகர் விவசாய அணி துணை அமைப்பாளர் மாணகிரி குணசேகர்,ஜெய ஹிந்துபுரம் நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்

    • புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
    • இந்த தகவலை போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

    மதுரை

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

    அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் சுமார் 1300 போலீசார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாக, கவனக் குறைவுடன் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

    அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவித் தால், அந்த பகுதியில் போலீ சாரின் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 மற்றும் 4 சக்கர ரோந்து வாகனங்கள் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் கண்காணிக்கப்படுவர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி, போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண்; 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் "காவல் உதவி" என்ற அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்"

    மேற்கண்ட தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
    • குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • சோழவந்தான் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.

    அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கோவில் ஊரின் முகப்பு பகுதியில், இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்தி ருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதே கோவிலில் ஏற்கனவே இந்த சம்பவத்தையும் சேர்த்து 3 முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் உற்சவர் சிலையும் திருடு போனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. பொருட்கள் மீட்கப்படவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகுமார் அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). இவரது மனைவி நான்சி (38). இவர்களது மகன் ஷேரப் (வயது 3).

    கிருஷ்ணகுமார் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லதிட்டமிட்டார். அதன்படி தனது மனைவி, மாமியார் நிர்மலா (54) மற்றும் மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டார். காரை பெங்களூரு தாசர ஹள்ளியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    அவர்களது கார் இன்று அதிகாலை மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரெயில்வே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    பாலத்தில் கார் மோதி விபத்தில் சிக்கியதை அந்த வழியாக மற்றொரு காரில் வந்த கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த பிஜூ என்பவர் பார்த்தார். அவர் விபத்து குறித்து சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசாரும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு வந்தனர்.

    அவர்கள் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அவர்களில் கிருஷ்ணகுமாரின் மாமியார் நிர்மலா சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். கிருஷ்ணகுமார், அவரது மனைவி, மகன், டிரைவர் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் சிறுவன் ஷேரப் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆனது.

    கிருஷ்ணகுமார், அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதூர் மலையின் அடி வாரத்தில் கே.பொத்தாம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏ.சதீஷ். இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். அதே நேரத்தில் தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணையில் 100 நாட்டு நாய்களை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட இனங்களில் நாட்டு நாய்கள் உள்ளன. இதில் கன்னி, சிப்பிப் பாறை ஆகிய வகை நாய்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவை. கோம்பை இன நாய் தேனி மாவட்டத்தை சேர்ந்தது. மண்டை வகை நாய்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவை.

    100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரிடம் உள்ள 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கோம்பை, மண்டை நாய் குட்டிகள் 6 ஆயிரத்துக்கும், கன்னி, சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியவற்றால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழில் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இங்கு வளர்க்கப்பட்ட 2 சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள விமான தளத்தில் ஓடு பாதைகளை பறவைகள் இல்லாமல் வைத்திருக்க ராஜபாளையம் நாய் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இங்கிருந்து ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை பலர் வாங்கி சென்றுள்ளனர்.

    • அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர் வைத்திருந்த கைப்பையில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன.

    மதுரை

    மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் ஜெகன்நாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24), அவரது நண்பர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (38) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×