என் மலர்
நீங்கள் தேடியது "School Training"
- வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.
- மேலாளர் அருணா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் சாத்தையாறு உபவடி நிலப்பகுதி நீரேத்தானில் வயல்வெளிப்பள்ளி செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். நடமாடும் மண் மாதிரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர் இந்து, மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்யும் முறை பற்றி விளக்க மளித்தார்.
வேளாண்மை அலுவலர் சத்தியவாணி விதை நேர்த்தி செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி எடுத்துக்கூறினார். கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதில் வேளாண்மை அலுவலர் டார்வின், உதவி அலுவலர் பாண்டியராஜன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






