என் மலர்
மதுரை
- எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
- ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.
அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
- பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் ''தென்னகத்து வேளாங்கண்ணி'' என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
திருத்தல பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நள்ளிரவு 11.30மணிக்கு 2022-ம் ஆண்டுக்கு நன்றி திருப்பலியும், 12 மணிக்கு 2023-ம்ஆண்டு பிறந்ததை யொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது. புத்தாண்டை வரவேற்று பாடல்கள் பாடினர்.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
- மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டார்.
- இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர்
தேசிய அளவிலான சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்கான அணித்தேர்வு தேவகோட்டையில் நடந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மகள் பிளஸ்-1 மாணவி ராகவி (16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.
- மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
- இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் அமைப்பு யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விரும்பும் பக்தர்கள் ரூ. 1000 செலுத்தினால் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக கோவில் மேற்பார்வையாளர் ஆறுமுகம் போலீசில் புகார் செய்தார். அதில், மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்
மதுரை
தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் முழுநேர அன்னதானம் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த திட்டம் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியர் கோவில் ஆகிய தலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் "தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
அதற்கான விழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் கோவில் அதிகாரிகள் செல்லத்துரை, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்படி அங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- வாகனம் மோதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- மேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலூர்
மதுரை-திருச்சி 4 வழிச்சாலை கூத்தப்பன்பட்டிபகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று இரவு நடந்து சென்ற இளம்பெண் மீது நாகர்கோவிலில் இருந்து திருச்சி சென்ற மினி வேன் மோதி சென்றது. இதில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அந்த இடத்தில் நிற்காமல் சென்ற மினி வேன் டிரைவர் திருச்சி முண்டூரை சேர்ந்த இருதயராஜ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்ப2வ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கலா சேகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
மேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
- போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மதுரை
உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-
6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.
2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.
இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
- ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். குடவரை கோவிலான இங்கு ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பு சித்திரை 1-ந்தேதி மூலவருக்கு தங்க கவசமும், ஆங்கில வருட பிறப்பு நாள் அன்று மூலவருக்கு வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.
நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கருவறையில் உள்ள சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாற்றுபடியாகிறது. இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.
உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெறும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
- கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்பாண்டியன், ஏட்டுகள் முருகேசன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- 2023-ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்று ஜோதிடர் கரு.கருப்பையா பேட்டி அளித்துள்ளார்.
- தினசரி காலையில் சூரிய வழிபாடும், குல தெய்வ வழிபாடும் நல்ல முன்னேற்றம் பெற உதவும் பரிகாரங்களாகும்.
மதுரை
புதிதாக பிறக்க உள்ள 2023-ம் ஆண்டு பலன்கள் குறித்து ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகள் என 3 வருகின்றன. மேலும் இந்த ஆண்டில் சுக்கிர பலன் நன்றாக இருப்பதால் மழை வளம் கூடும். மளிகை பொருட்கள், காய்கறிகள், வாகன உதிரி பாகங்கள் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர லாம்.
தங்கம்*வ-ள்ளி உயர்ந்து கொண்டே செல்லும். சொத்து சுக வாகனங்கள் விலைகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். செவ்வாய் பகவான் _ சனி பகவான் காரணமாக கண்ணுக்குத் தெரியாத பூச்சி நோய் தொற்றுகளும் வரலாம். வளர்ச்சிகள் கூடி னாலும், உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வருடமாக இருக்கிறது.
29.3.2023 சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு நல்ல மாற்றங்கள் ஒரு சிலருக்கு வரலாம். 22.4 2023 குரு பெயர்ச்சிக்குப் பிறகு சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் யோகம் பெறலாம். 8.10.2023 ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மேஷம், துலாம் ராசிக்கா ரர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். தினசரி காலை யில் சூரிய வழிபாடும், குல தெய்வ வழிபாடும் நல்ல முன்னேற்றம் பெற உதவும் பரிகாரங்களாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ராமேசுவரம் - மதுரை ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
- மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
பரமக்குடி - சத்திரக்குடி இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (1-ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து வழக்கமாக காலை 11 மணிக்கு புறப்படும் மதுரை ரெயில் (06654), ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு செல்லும். பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
- நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.






