search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

    • பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் பருவ பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு.
    • மொத்தம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல்.

    தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1239 மில்லியன் கனஅடி நீரில், 02.01.2023 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் மொத்தம் 690 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை அணையிலிருந்து திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.


    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் இரண்டாம் பருவ பாசனத்திற்கு 01.01.2023 முதல் 30.04.2023 வரை 120 நாட்களுக்கு, 5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நாள் ஒன்றுக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×