என் மலர்
மதுரை
- மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சித்தர் நத்தத்தை சேர்ந்த சரவணகுமார்(38) கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டியை நோக்கி வந்து ெகாண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளும், கல்லூத்தை சேர்ந்த ரேசன் கடை விற்பனையாளர் ராஜபாண்டி(40), ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நல்லொச்சான்பட்டியில் மோதி கொண்டன. இந்த விபத்தில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ராஜபாண்டி படுகாயத்துடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்திதான் வழிபடுவார்கள்.
- 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்திதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.
- யூ-டியூப் சேனல்கள் நடத்தி வரும் இவர்கள் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை கவருவதற்காக சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தது தெரியவந்தது.
- தனிப்படை போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலானவை. 2 ஆட்டோக்கள் ஒன்றாக போனால் ஒட்டுமொத்த ரோடும் அடைக்கப்பட்டு விடும் என்ற நிலையில் தான் இங்கு போக்குவரத்து சாலைகள் உள்ளன.
இந்தநிலையில் ஒரு சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது, வீலிங் செய்வது போன்ற அதிசாகச பயணங்களை மேற்கொண்டு வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்புவது ஆகிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை நகரில் முக்கிய சாலைகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்துகளும், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மேற்கண்ட சம்ப வங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வல்லபாய் படேல் ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக 'வீலிங்' செய்து கொண்டு இருந்தனர். அதனை 2 பேர் வீடியோ எடுத்தனர். உடனே தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர்.
5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் கோரிப்பாளையம், முகமதியர் தெரு ராஜா முகமது மகன் சேக் முகமது (வயது 21), சரவணன் மகன் நல்லசிவம் (வயது 22), ராமநாதபுரம் மாவட்டம் முத்துவயல் ராஜகோபால் மகன் மதன்குமார் (வயது 21), கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெரு ஜின்னா மகன் சாஜன் (வயது 21), பொதும்பு சோனை கோவில் தெரு, பிச்சை மகன் சபரிமலை என்ற பிரதீஸ் (வயது 22) என்பது தெரியவந்தது.
யூ-டியூப் சேனல்கள் நடத்தி வரும் இவர்கள் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களை கவருவதற்காக சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கேமிரா, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றார்.
- வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி (வயது55), விவசாயி.
இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் பூச்சிப்பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்றார்.
வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மாலையில் அவர் வேலை பார்த்த விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூச்சிப்பாண்டியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விவசாயி பூச்சிப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் இருந்த மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமை பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 37 ஆயிரம் இணைப்புகள் மதுரை
மதுரை :
தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 72 ஆயிரத்து 122 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 30 திட்டபணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இதுவரை நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இதனை மக்களிடம் நாங்கள் கொண்டு போய் சேர்க்காததுதான் பிரச்சினை. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்திற்கு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டார்.
இதுவரை, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 220 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 கோடியே 11 லட்சம் பயணம் ஆகும்.
ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமை பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மேலும் 1 லட்சத்து 6 பேர் சேருவதற்கு விண்ணப்பம் வந்துள்ளது. இன்னும் 2 நாளில் அவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கொரோனா காலத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்தனர்.
விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 37 ஆயிரம் இணைப்புகள் மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
செங்கல் எடுத்து போராடுவார்கள்
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கி கட்டுமான பணியை தொடங்கவில்லை என்றால் மதுரை மக்கள் ஒவ்வொருவரும் கையில் செங்கல் எடுத்து போராடுவார்கள். தி.மு.க. எப்போதும் உங்களுடன் இருக்கும். எனவே நீங்களும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது, பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
- விபத்து குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வாடிப்பட்டி:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் கோவைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் நெல்லை, தூத்துக்குடி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 41 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ராஜேஷ் (வயது30) என்பவர் ஓட்டி சென்றார். பஸ் இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலி பட்டி மேம்பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்களில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்த பஸ் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அவர்களில் படுகாயமடைந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எத்திலிப்பட்டி கிராமம் காமாட்சிபுரத்தை சேர்ந்த பூ வியாபாரியான முருகன் (32) என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் காயமடைந்த கோவையை சேர்ந்த ஜெகன்(23), சிவா(28), செண்பகராஜன்(47), பிரபு(38), சிவக்குமார்(33), பொள்ளாச்சியை சேர்ந்த ராதா(48), ஞானதீபா(16), சுந்தர்ராஜன்(58), தீபாலட்சுமி(70), உடுமலையை சேர்ந்த சாந்தி(34), திருச்செந்தூரை சேர்ந்த முத்தம்மாள்(53), தூத்துக்குடியை சேர்ந்த நளினி(35), நெல்லை ராதாபுரத்தை சேர்ந்த மாசாணம்(60), செம்பாலை(34), புதுவை கயல்விழி(48),விழுப்புரம் ரவீந்திரகுமார்(42), திண்டுக்கல் நிலக்கோட்டை காந்தி(41), விளாம்பட்டி வினோத்பாபு(20) ஆகிய 18 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேர்காணல் நடைபெற்றது.
- மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நேர்காணலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.
அவர் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார்.
முன்னதாக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்பட திரளான தி.மு.க.வினர் வரவேற்றனர்.
- குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
- குணசீலன் தனது சம்பள பணம், தனது தம்பியின் சம்பள பணம் ஆகியவற்றை வீட்டிற்கு அனுப்பாமல் அதனை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
மதுரை:
சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்தவர் குணசீலன்(வயது26). இவரது தம்பி பசுபதி. இவர்கள் மதுரை மாவட்டம் சாத்த மங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து தாலுகாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் கடந்த 6 மாதங்களாக ஓட்டலுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அப்போது குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார்.
அப்போது அவர் தனது சம்பள பணம், தனது தம்பியின் சம்பள பணம் ஆகியவற்றை வீட்டிற்கு அனுப்பாமல் அதனை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் அவர் கடந்த 6 மாதங்களில் ரூ.5½ லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குணசீலனின் குடும்பத்தினர் தங்களது செலவுக்கு பணம் அனுப்பாததால் அவரிடம் உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டு வந்தனர். ஆனால் அவர்களிடம் பணத்தை இழந்தது பற்றி சொல்ல முடியாமல் தவித்த குணசீலன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசீலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஆன்லைன் ரம்மி விளையாடியதால் அவருக்கு கடன் இருந்ததா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாத்தமங்கலம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.
- இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருமங்கலம் மேலஉரப்பனூர், இந்திரா காலனி, நேதாஜிநகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது32). இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராமநாதன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
அவர் எஸ்.ஆர்.கண்ணன் தோப்பு கண்மாய் முன்பு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமநாதன் உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
மதுரை பசுமலையில் நேற்று நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்தவிபத்து குறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- மேலும் அரசு சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை
மன்னர் திருமலைநாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், முருகேசன் ஆகியோர் தலைமையில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலையில் ஊர்வலமாக வந்து திருமலை நாயக்கரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இனை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், சோலை இளவரசன், ரகுதேவன், மீனவரணி ராமநாதன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி உசிலை பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார்.
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சிவா, கொடிவைரன், யோகராஜ், துதி திருநாவுகரசு, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன், சிதம்பரம், ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், அர்ஜுனன், நாச்சியப்பன், புல்லட் ராமமூர்த்தி, கிரி சாத்தன உடையார், பத்ரி முருகன், முருகவேல், இன்பம், ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
- இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது
மதுரை
மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.
ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.
மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்
கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.
- மதுரை ரிங்ரோடு கலைஞர் திடலில் இன்று மாலை 75 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
- இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நலத்தி ட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையில் இன்று நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்குகிறார். இதில் 75 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.180 கோடி கடன் உதவிளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த விழாவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேலு, அக்ரி கணேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி. பி. ராஜா, மூவேந்திரன், வைகை மருது,எஸ்ஸார் கோபி, அதலை செந்தில் குமார், ஈஸ்வரன் போஸ் முத்தையா கிருஷ்ணா பாண்டி குட்டி என்ற ராஜரத்தினம், பாலா என்ற பாலசுப்பிரமணியன், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, வாசு, ரோகிணி பொம்மை தேவன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.






