என் மலர்tooltip icon

    மதுரை

    • திருமங்கலம் அருகே வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகம் சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது48). இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.பாண்டி சிவரக்கோட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவரக்கோட்டை நான்கு வழி சாலையை பாயண்டி கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாண்டி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவ லறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே கணவன்-மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45) டேங்கர் லாரி டிரைவர் .இவரது மனைவி தீபா (39) இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், ராகவி என்ற மகளும் உள்ளனர்.

    ராகவிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. கவுதமன் சென்னையில் கேட்டரிங் படித்து வருகிறார். வீட்டில் திருப்பதியும், தீபாவும் மட்டும் வசித்து வந்தனர். திருப்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தற்கொலை

    இந்த நிலையில் நேற்று திருப்பதியும், தீபாவும் வசித்த வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி பொதுமக்கள் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் திருப்பதியும், தீபாவும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.

    கடன் பிரச்சினை

    அவர்கள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்ய என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தங்களது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருப்பதி மற்றும் தீபாவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு வழங்க பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 1985 -86 முதல் 2010-11 வரை கட்டப்பட்ட கான்கிரீட் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ள வீடுகள், மோசமான நிலையில் வாழ தகுதியில்லாத வீடுகள் கணக்கெடுப்பு இன்று (8-ந் தேதி) முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சமுதாய வள பயிற்றுநர் மூலம் Repairs to Rural Houses என்ற செல்போன் செயலி வாயிலாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த கணக்கெடுப்பை சிறந்த முறையில் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
    • மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    மதுரை:

    தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகா, வினித்தின் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வினித், குருத்திகா உள்ளிட்டோர் வந்து விட்டு திரும்பினர்.

    குத்துக்கல்வலசையில் ஒரு மர ஆலை அலுவலகத்தில் இருந்தபோது நவீன் பட்டேல் மற்றும் சிலர் அங்கு புகுந்து அவர்களை தாக்கி குருத்திகாவை காரில் கடத்தி சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    இதைத்தொடர்ந்து நவீன் பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். குருத்திகா மற்றும் அவரது பெற்றோர் கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களுக்கு மாறி மாறி சென்றனர்.

    இதனை போலீசார் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பார்த்து சென்றபோது, வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் அவர்கள் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத்தில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக குருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், "நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகிவிட்டது.

    நான், அவர் மற்றும் எனது பெற்றோருடன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரஷரோ, டார்ச்சரோ கிடையாது" என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவி குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். அவர் குஜராத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வேண்டும். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    எனவே அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற மார்ச் 1-ந்தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

    இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் குருத்திகா தனது பெற்றோருடன் இன்று மதுரைக்கு வந்தார். அவர் பிற்பகலில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகலாம் என தெரிகிறது.

    அதே நேரத்தில் குருத்திகாவின் தந்தை நவீன்பட்டேல் உள்ளிட்ட 8 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தண்டவாள இணைப்பில் விரிசலால் விபத்தில் இருந்து ரெயிலை காப்பாற்றிய பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதுகுறித்து ராஜபாளையம், சங்கரன்கோவில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    சிவகாசி ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் சுபா. இவர் கடந்த மாதம் ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடையே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரெயில் பாதை இணைப்பு பகுதியில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ராஜபாளையம், சங்கரன்கோவில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில், ராஜபாளையத்தில் நிறுத்தப்பட்டது.

    அதேபோல மணப்பாறை-கொளத்தூர் இடையே 'கீ மேன்' ஆக உள்ள வளர்மதி, ரெயில் பாதையில் விரிசலை கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். மதுரையில் நடந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மேற்கண்ட 2 பெண் ஊழியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை பொறியாளர்கள் நாராயணன், பிரவீனா, ஹிருதயேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டா ரத்தில் மேலவளவு மற்றும் கேசம்பட்டி, கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் வழங்கினார்.

    வேளாண்மை துறை சார்பாக 50 சதவீதம் மானியத்தில் தார்பாலின், பண்ணை கருவிகள், நேரடி நெல் விதைக்கும் கருவி மற்றும் தென்னை நடவு, மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.

    பின்னர் தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் ராணி, வேளாண்மை உதவி இயக்குநர் சுபாசாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், துணை வேளாண்மை அலுவலர் தனசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி தோட்டக்கலை அலுவலர் அப்துல் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற பூமிகா (வயது27). திருநங்கையான சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது பூமிகா அங்குள்ள தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பூமிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வாடிப்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம் ராமநாதன் காரில் தனது கம்பெனிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராமநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதனிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் பொன்பெரு மாள் கோவில்தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா (28), பேட்டை புதூர் கோபிநாத்ராஜா (35) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை பாலமேட்டில் உள்ள முருகன் கோவிலில் அன்னதானம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    தைப்பூச உற்சவத்தையொட்டி பாலமேடு வேல்முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை குழு சார்பில் சாமியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட சாமியார்களுக்கு குருநாதர் கஜேந்திரன், கண்ணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக கோவிலில் பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சாதுக்களுக்கு வேட்டி வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே விநாயகர், முத்தாலம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியில் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 4 கால யாக பூஜையுடன் கணபதி, மஹா சுதர்சன ஹோமம், விநாயகர், மஹாலட்சுமி, கோ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட நீர் கோவிலை வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் அருகே ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திதிருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடம் உள்ளது. இந்த கோவிலில் ஆயிரம் கண்ணுடையாள்,மகாவராஹி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிராதேவி, மகா மிருத்யுஞ்யேஸ்வரராகிய மகா சக்தி பீடத்தில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணுடையாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பவுர்ணமி திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய தினத்தில் விக்னேசுவர பூஜை, 2-ம் கால யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகிஆயிரம் கண்ணுடையாள் கோபுர கலசத்திற்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலையில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன்-சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×