என் மலர்tooltip icon

    மதுரை

    • அழகுமாரி என்ற பெண் நாய்களிடம் சிக்கிய குரங்கை கண்டு பரிதாபப்பட்டார்.
    • குரங்கை மீட்காவிட்டால் நாய்கள் கடித்துக் கொன்றுவிடும் என்பதால் அவர் தன்னை பற்றி கவலைப்படாமல் நாய்களை விரட்டி விட்டு குரங்கை காப்பாற்றினார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகளை நாய்கள் துரத்துவதும், நாய்களை குரங்குகள் துரத்துவதும் அடிக்கடி வாடிக்கையாக நடக்கும்.

    இந்தநிலையில் இன்று காலை ஆற்றங்கரையில் தனியாக சுற்றித்திரிந்த ஒரு கர்ப்பிணி பெண் குரங்கை 2 நாய்கள் துரத்திச்சென்று கடிக்க பாய்ந்தன. நாய்களிடம் சிக்காமல் அந்த குரங்கு தப்பி ஓடியது. ஆனால் நாய்கள் தொடர்ந்து குரங்கை விரட்டிச்சென்று கடித்துக் குதறின.

    இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அழகுமாரி(வயது40) என்ற பெண் நாய்களிடம் சிக்கிய குரங்கை கண்டு பரிதாபப்பட்டார். உடனடியாக குரங்கை மீட்காவிட்டால் நாய்கள் கடித்துக் கொன்றுவிடும் என்பதால் அவர் தன்னை பற்றி கவலைப்படாமல் நாய்களை விரட்டி விட்டு குரங்கை காப்பாற்றினார். பின்னர் சின்னப்பட்டி கிராம கால்நடை மருத்துவமனைக்கு அந்த குரங்கை தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த குரங்கை மீட்ட இடத்தில் கொண்டு சென்று விட்டார். இதனை கண்ட பொதுமக்கள் நாய்களிடம் இருந்து குரங்கை காப்பாற்றிய அழகுமாரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • நாளை மதுரைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1½ கோடி தொண்டர் களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர் களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுத லோடு அ.தி.மு.க சிறப்பாக பணியாற்றி வருகிறது. அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதி களின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி யின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து உள்ளார்.

    அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் நாளை (10-ந்தேதி) மதியம் 1 மணிக்கு இடைக்கால பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (நான்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் ஆகியோர் வரவேற்புரையாற்று கிறார்கள். பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை எதிரொலிக்க, பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மட்டுமல்லாது, பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாளை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ரமேஷ் கண்ணன்(வயது36). இவர் நேற்று தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூர் சாலையில் உள்ள செம்புகுடிபட்டி கால்வாய் பாலத்தில் உட்கார்ந்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த 4 மர்ம நபர்கள் இறங்கி வந்து ரமேஷ் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது பற்றி ரமேஷ் கண்ணன் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சுமியின் மருமகனான கந்தவேல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • சென்னை நுங்கம்பாக்கம் மேதாநகரில் தனது மனைவியுடன் வசித்து வந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் யாரோ மர்மநபர் பின்பக்க கதவை உடைத்து புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றார்.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

    அதனை வைத்து பழைய குற்றவாளிகள் யாரும் லட்சுமி வீட்டில் நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்று போலீசார் துப்பு துலக்கி வந்தனர். லட்சுமி வீட்டில் இருந்தவர்களின் கைரேகைகளையும் சேகரித்து ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

    அப்போது லட்சுமியின் மருமகனான கந்தவேல்(வயது38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சென்னை நுங்கம்பாக்கம் மேதாநகரில் தனது மனைவியுடன் வசித்து வந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் அவரிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கும், திருட்டுக்கும் தொடர்பில்லை என கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் போலீசாருக்கு அவர் மீது ஏற்பட்ட சந்தேகம் விலகவில்லை.

    இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமியார் லட்சுமி வீட்டில் பணம் மற்றும் நகையை திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும்.
    • ஜம்மு காஷ்மீரில் இருந்து இன்று புறப்படும் வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.

    மதுரை:

    மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் வருகிற 15-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தேனியில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு வரும் மதுரை பயணிகள் ரெயில், 15-ந் தேதி ரத்து செய்யப்படும்.

    மதுரை-திருவனந்தபுரம் (அமிர்தா), மதுரை-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். மதுரை-எழும்பூர் (தேஜாஸ்) எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் வியாழன் தவிர மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் இன்று (9-ந் தேதி) கூடல்நகரில் இருந்து புறப்படும். கச்சிகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி திண்டுக்கல் வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து 12-ந் தேதி புறப்பட வேண்டிய கச்சிகுடா எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். பனாரஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வருகிற 12-ந் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி புறப்பட வேண்டிய பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

    செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

    நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

    கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந் தேதி வரை விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும். ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வருகிற 15-ந் தேதி வரை மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து இன்று புறப்படும் வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் நிற்கும். கச்சிகுடாவில் இருந்து வருகிற 12-ந் தேதி நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

    தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும். திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரெயில், வருகிற 15-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
    • ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

    மதுரை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.

    மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கல்வெட்டில் 2 வரியில் எழுத்துக்கள் உள்ளன. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன.
    • குகையில் வெட்டப்பட்டுள்ள 5 கற்படுகைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம்:

    முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரைக் கோவில்கள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் ரெயில் நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச் சரிவில் இயற்கையாக அமைந்த 2 குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுகைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு சமணர் படுகை உள்ளது. இதன் உள்ளே 5 கற்படுகைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்புப் பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது. இதனை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டுபிடித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.

    இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது:-

    இக்கல்வெட்டில் 2 வரியில் எழுத்துக்கள் உள்ளன. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. 2-ம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை 'யாரஅதிறஈத்த/////வதர' என படிக்கலாம். குகையில் வெட்டப்பட்டுள்ள 5 கற்படுகைகளைக் குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன.

    இக்கற்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக 'யாரஅதிற' என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் 'அ' சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுகையிலான இருக்கையைக் குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள தமிழிக் கல்வெட்டிலும் 3 கற்படுகைகளைக் குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை "அ" மற்றும் "ர" போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, "5" என்ற எண்ணைக் குறிக்க 5 கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இக்கல்வெட்டை கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

    இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50-கிராம் எடையுள்ள பே லோடு-ஐ வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர்.
    • எஸ்.எஸ்.எல்.வி. டி-2 செயற்கைக்கோளுடன் பொருத்தப்பட்டு வரும் 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசாதி சாட்-1 செயற்கைகோள் பாகங்களை தயாரித்தனர். பின்னர் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ராக்கெட் வழிமாறியதால் வெற்றிகரமாக செயற்கைக் கோளை ஏவமுடியவில்லை.

    அதன் தொடர்ச்சியாக தற்போது அதே நிறுவனத்துடன் இணைந்து ஆசாதி சாட்-2 தயாரிக்கும் பணியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50-கிராம் எடையுள்ள பே லோடு-ஐ வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர்.

    தற்போது அந்த பேலோடு, ஆசாதி சாட்-2-ல் பொருத்தப்பட்டுள்ளது. இவை எஸ்.எஸ்.எல்.வி. டி-2 செயற்கைக்கோளுடன் பொருத்தப்பட்டு வரும் 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.

    இந்த திட்டத்தில் பணியாற்றிய மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியை சிந்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியின் மாணவிகளை மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் முரளி, பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம், பள்ளி உதவித் தலைமையாசிரியை வெங்கடேஸ்வரி மற்றும் ரெகுபதி ஆகியோர் பாராட்டினார்கள். இம்மாணவிகள் வரும் 10-ம் தேதி செயற்கைக்கோள் ஏவும் நிகழ்வை நேரில் பார்க்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசியர்கள் செய்து வருகின்றனர்.

    • டீயில் போதை மருந்து கலந்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
    • தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற தனியார் ஊழியர் ஜிஜேந்தரை கைது செய்து அவர் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
    • சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    ×